உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்நாட்டு மக்களின் மரபும் பண்பாடும்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பனைக்கதைகளும் இதிகாசங்களும் புராணங்களும் அனுபவித்தார்கள். 39 நமது பேரப் பிள்ளைகளும் அவர்களுடைய பேரப்பிள்ளையும் இந்தக் காவிரியில்தான் குளித்துப் புண்ணியமும் புனிதமும் மகிழ்ச்சியும் அடையப் போகிறார்கள். றைவன் - இறைவியர் வழி வழியாகத் தமிழ்நாட்டை ஆண்ட அரசர்கள் கோயில்களை விரிவுபடுத்தியும் வழிபாட்டு முறைகளை வகுத்தும் செம்மைப்படுத்தி யும் உள்ளார்கள். தமிழ்நாட்டுக்குப் புதியவர்களாக வந்த பல்லவர்கூட, இங்கு நிகழ்ந்த வழிபாட்டு முறைகளைக்கண்டு முதலில் வியப்படைந்து பின்னர் அவற்றை ஏற்று ஊக்குவித்தனர். பழைய கோயில்களைப் பேணியும் விரிவுபடுத்தியும் புதிய கோயில்களைக் கட்டியும் பக்தியை வளர்த்தனர். பல்லவர்க்குப் பின்வந்த சோழர்கள், நான்கு வேதங்களையும் நன்கு பயின்ற பிராமணர் களுக்குச் 'சதுர்வேதி மங்கலங்கள்' என வழங்கிய இருப்பிடங்களை ஏற்படுத்தினர். ஆனால் அதேசமயத்தில் ஆதி சைவர் . . என்ற சிவாச்சாரியார்களின் உரிமைகளையும் சோழர்கள் பாதுகாத்தார்கள். தலைமுறை தலைமுறையாக இவர்களே தமிழ்நாட்டுக் கோயில்களில் குருக்கள் மாராக இருந்திருப்பது பழைய கல்வெட்டுக்களிலும் செப்பேடுகளிலும் சொல்லப்பட்டிருக்கிறது. சங்ககாலத்தில் ஐவகை நிலங்களுக்கும் உரிய ஐந்து தெய்வகளை மட்டுமே மக்கள் வழிபட்டு வந்தார்கள். குறிஞ்சி நிலத்துக் கடவுளாக முருகனையும், முல்லைநிலத்தில் விஷ்ணுவையும்,பாலை நிலத்தில் துர்கை அல்லது காளியையும், மருத நிலத்தில் இந்திரனை யும், நெய்தல் நிலத்தில் வருணனையும் தமிழர்கள் வழிபட்டார்கள். ஏற்கெனவே இருந்த இந்த வழிபாடு பல்லவர்கள் வந்த பிறகு மிக விரிவான சடங்காக நடத்தப்படலாயிற்று. பல்லவர் காலம் முதல் விஜயநகரப் பேரரசின் இறுதிக்காலம் வரை, ஆரியக் கடவுளர் இறைவன், இறைவி - திருமேனிகள் பிரதிஷ்டை செய்யப்பட்ட வண்ணமாக இருந்தன. சிற்றூர்களில் உள்ள கோயில்களிலும் இந்த நிலை இருந்தது. ஏற்கெனவே அவற்றில் இருந்த திராவிட இறைவன் இறைவியர் உருவங்கள் புறக்கணிக்கப் பட்டன அல்லது அவை வெளிச் சுற்றுப் பிரகாரங்களில் வைக்கப் பட்டன, இதனால் ஒண்டவந்த பிடாரி ஊர்ப் பிடாரியை ஓட்டிற்று என்ற பழமொழி ஏற்பட்டது. - கோயில்களில் தமிழ்நாட்டில் வழிபடப்படும் பிராமணக் கடவுளர் விநாயகர், சிவன், விஷ்ணு, இன்னும் இவர்களுக்கு உரிய இறைவிகள் ஆவர்.