40 தமிழ்நாட்டு மக்களின் மரபும் பண்பாடும் இவர்களுள் மிகவும் செல்வாக்குப் பெற்று எங்கும் பரவியிருப்பவர், குள்ளக் குள்ளனாயும் குண்டு வயிறனயும் ஆனை முகனாயும் உள்ள விநாயகர். விநாயகர் சிலையை ஆற்றங்கரைகளிலும் ஏரிக்கரை களிலும் மரங்களின் அடியிலும் காணலாம். விநாயகர் கோயில் கட்டுவதில் ஒரு புதிய ஆர்வத்தையும் பலரிடம் பார்க்கிறோம். ஓர் இடத்தை அரசாங்கம் ஏதாவது ஒரு குறிப்பிட்ட செயலுக்காக எடுத்துக்கொள்வதையோ, அல்லது ஓர் இடத்தில் நெடுஞ்சாலை தடுப்பதற்காகவோ, திடீரென்று விநாயகர் போடுவதைத் கோயில்கள் கட்டப்படுகின்றன. இறைவியை, அன்னையாகவும் உலகநாயகியாகவும் வழிபடும் மரபு. மோஹஞ்ச தாரோ, ஹரப்பா காலத்திலிருந்து தொடர்ந்து நிலவி வருகிறது. எருமை என்று இராட்சசனைக்கொன்ற துர்காதேவிதான் முக்கியமாக வழிபடப்படும் இறைவி ஆவாள். அடுத்தபடி அந்தக் கோயிலில் உள்ள இறைவிகளையும் கிராமங்களைக் காப்பாற்றும் கிராம தேவதைகளையும் மக்கள் பயபக்தியுடன் வழிபட்டு வருகின்றனர். இவ்வகையில் சில இறைவியர் பெயர்களைக் குறிப்பிடலாம்: தலம் மயிலாப்பூர் காஞ்சிபுரம் சிதம்பரம் திருக்கடவூர் திருவிடைமருதூர் மதுரை திருநெல்வேலி கன்னியாகுமரி இறைவி கற்பகாம்மாள் காமாட்சி சிவகாமசுந்தரி அபிராமி முகாம்பிகை மீனாட்சி செல்வத்துக்குரிய இறைவியான காந்திமதி குமரியம்மன் லெட்சுமியைத் தமிழர்கள், திருமகள் என்ற பெயரால், விரும்பி வேண்டி பக்தி சிரத்தையுடன் வழிபட்டு அவளுடைய அருளுக்காகப் பிரார்த்தனை செய்கிறார்கள். பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை. எனவே, வேண்டும் வரங்களை, பொருள்களை வாரி வழங்கும் திருமகளின் படங்களை வீடுகளில் கண்ணாடியில் மாட்டி, மேடைமீது இருத்தி, நாள்தோறும் வழி படுகின்றனர். அஷ்டலெட்சுமிகளை வழிபடுவதும் மரபு. திருமணச் சீர்வரிசைகளுடன் (கலைமகள் படத்துடன்) திருமகள் படமும் மணப் பெண்ணுக்கு வழங்கப்படும். பெண்குழந்தைக்கு லெட்சுமி என்று பெயரிடுவதும் வழக்கம். வேறு பெயரிட்டாலும்கூட, அந்தப்
பக்கம்:தமிழ்நாட்டு மக்களின் மரபும் பண்பாடும்.pdf/52
Appearance