பக்கம்:தமிழ்நாட்டு வட எல்லை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

என்ற சிறப்புப் பெற்றிருந்த வேங்கடம், பின்னர்ச் சமயச் சிறப்பும் பெற்றுத் தமிழ் மக்கள் உள்ளம் கவர்ந்த இட மாக இருந்தது என்பது இக்குறிப்புகளால் விளக்கமா கிறது அன்றாே ? -

5. ஏனய ஆழ்வார்களும் சிறந்த வைணவத் தல மாகிய வேங்கடத்தைக் குறித்துள்ளனர். அவருள் குலசேக ராழ்வார் வேங்கடத்தை நன்கு பார்வையிட்டவர்; மலைக் காட்சிகளைக் கண்டு மகிழ்ந்தவர் ; கோனேரி கண்டு குது கலித்தவர் ; --

“ கோனேரி வாழும் குருகாய்ப் பிறவேனே !’

என்று கவலை கொண்டவர்; கின் பக்தர்கள் மிதித்து ாடக்கும் படியாய் இருக்க நான் பேறு பெறவில்லையே ‘ என்று வருந்தினவர். திருமலை பற்றிய பாடல்களை சோக் கினல் - அவர் காலத்தில் திருமலை பொது ம்க்கள் நாள் தோறும் சென்று வணங்கும் சிறந்த தலமாக விளக்க முற்றிருந்தது என்பது அறியலாம்.

6. வரலாற்று உணர்ச்சியும் சமய ட் ப மு. ம் உணர்ந்த திருமங்கையாழ்வார் (நந்திவர்ம) பல்லவ மல்லன் காலத்தவர் (கி. பி. 725-190). அவர் திருவேங்கடத்தைப் பற்றி 40 செய்யுட்கள் பாடியுள்ளார். -

இங்கினம் பல்லவர் காலத்தில் வாழ்ந்த ஆழ்வார் பன்னிருவரும், தமிழகத்தின் வட எல்லையாகச் சங்க காலத்திற் கருதப்பட்டுப் பாராட்டுப் பெற்ற வேங்கட மலையை -வைணவத் தலமாகக் கருதிப் போற்றிப் பல பைந்தமிழ்ப் பாக்களில் பாராட்டி மகிழ்ந்தனர்; தரிசித்து மகிழ்ந்தனர் எனின், வேங்கடம் பல்லவர் காலத்திலும் தமிழ் வழங்கப் பெற்ற பகுதியாகவே இருந்தது என்பது கன் கறியலாம். இஃதே உண்மைஎன்பதை முன்னர்க் காட்டிய