பக்கம்:தமிழ்நாட்டு வட எல்லை.pdf/50

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


44

களில் ஒருவன் காளத்திக் கோவிலுக்குத் தானம் செய்

துள்ளான், 28

மூன்றாம் குலோத்துங்கன் கல்வெட்டுகள் வடக்கே நெல்லூர், ரெட்டிபாளையம், கடப்பை ஜில்லாவில் பொத் தப்பி முதலிய இடங்களில் காணப்படுகின்றன. மூன் மும் இராஜராஜன் காலத்தில் நெல்லூர், செங்கற்பட்டு, கடப்பை ஜில்லாக்களைத் தெலுங்குச் சோழர் ஆண்டு வங் தனர். அவருள் சிறந்தவன் கண்ட கோபாலன் என்பவன். அவன் சோழர்க்கு நண்புகை இருந்தான். மூன்றாம் இராஜேந்திரன் ஆட்சித் தொடக்கத்துக் கல்வெட்டுகள் நந்தலூர் (கடப்பை ஜில்லா), திரிபுராந்தகம் (கர்லூல் ஜில்லா) இவற்றிற் காணப்படுகின்றன. ஆதலால், இவனது ஆட்சி யிறுதியில் தெலுங்க நாடு சோழப் பெரு நாட்டி -லிருந்து பிரிந்துவிட்டது என்பது பெறப்படும்.

ஆதித்தல்ை உ ண் டா க் க ப் ப ட் டு இராஜ ராஜனுல் பலப்படுத்தப்பட்ட சோழப் பெருநாடு ஏறத் தாழக் கி. பி. 1800-ல் அழிந்து விட்டது. ஏறத்தாழக் கி. பி. 1260 வரை (ஏறத்தாழ 800 வருட காலம்) துங்க பத்திரையாறு வரைப்பட்டதெலுங்க காடு சோழர் ஆட்சி யில் இருந்தது ; சோழப் பேராசர்க்கு உட்பட்ட தெலுங் கத் தலைவர்கள் அந்நாட்டின் பல பகுதிகளை ஆண்டு வங் தனர் ; அவருள் நெல்லூர் ஜில்லாவில் இருந்த தெலுங்கச் சோடரும், கடப்பை ஜில்லாவில் இருந்த பொத்தப்பிச் சோழரும் குறிப்பிடத் தக்க அரச மரபினர். அவர்கள் காலத்தில் தெலுங்கமொழி நெல்லூர், சித்துளர் ஜில்லாக் களில் தலைகாட்டத் தொடங்கிய தென்னலாம்.

16. 105 of 1922. 17. Nellore Ins., Gudur 86; 601 and 602 of 1907; 435 of 1911.

18. 446 of 1919; A.R.E. 1920. II. 55.