பக்கம்:தமிழ்நாட்டு வட எல்லை.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

இன்றளவும் குறை கூறு தற்கும் இந்த இர்ண்டு ஜில்லா மக்களையும் மாற்றாந்தாய் மக்களைப்போலக் கருதுதற் கும் உரிய காரணம் யாது ? நெல்லூர் - சித்துனர் ஜில் லாக்கள் பல நூற்றாண்டுகளாகத் தமிழ் நாட்டுப் பகுதி களாக இருந்து, அண்மையில் தெலுங்கர் குடியேற்றத் திற்கு ஆளானமையே காரணம் ஆகும். இந்த இரண்டு ஜில்லாக்களும் தமிழகத்தின் வட எல்லப்புறப் பகுதி ஆதலின், தமிழும் தெலுங்கும் விரவியுள்ள - தமிழரும் தெலுங்கரும் கலந்துள்ள பகுதியாக இருக்கின்றது. அகளுல் இப்பகுதியில் தாய தமிழ் வழக்கும் இல்லை; தாய தெலுங்கு வழக்கும் இல்லை. உண்மைத் தமிழ் நாட்டுப் பகுதி நாளடைவில் இம்மாறுபாடு உற்றதற்குத் தென் இந்திய வரலாறே காரணமாகும்.

ஒரு தாய் ஈன்ற மக்கள்

பழைய த மி , லி ரு ங் து தெலுங்கு, கன்னடம்,

மலையாளம், துளுவம் முதலிய பல மொழிகள் பிரிந்து நாளடைவில் வேறு மொழிகளாக மாறின என்பது ஒரு சார் மொழி ஆராய்ச்சியாளர் கூற் று. தமிழ் தெலுங்கு - கன்னடம் - மலேயாளம் என்பன மிகப் பழைய திராவிடமொழி ஒன்றிலிருந்து பிரிந்தவை என் பது பிறிதொருசார் ஆராய்ச்சியாளர் முடிபு. உண்மை எதுவாயினும், தமிழ் - தெலுங்கு ஆகியவை ஒர் இன மொழிகள் என்பதை அனைவரும் ஒப்புகின்றனர். அஃது உண்மையாயின், இந்த இரண்டு மொழிகளைப் பேசும் மக்களும் ஓர் இனத்தவர் என்பது உண்மையாகும். மண்ணுசை ஒழிக

ஆகவே, இருதிறத்தாரும் ஒத்த அன்பும் சல் லெண்ணமும் உடையாக இருந்து - அடுத்தடுத்த இடங்