பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியத்துக்கு முன் 97 தொல்காப்பியமும், மாபுராணமும், இசை நுணுக்கமும், பூத புராணமும் என இவை. அவர் மூவாயிராது எழுநூற்றி யாண்டு சங்கமிருந்தார் என்ப. அவரைச்சங்கம் இரீஇயினார் வெண்டேர்ச் செழியன் முதலாக முடத்திருமாறன் ஈறாக ஐம்பத்தொன்பதின்மர் என்ப. அவருள் கவியரங்கேறினார் ஐவர் என்ப. அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது கபாட புரத்து என்ப. அக்காலத்துப் போலும் பாண்டியனாட்டைக் கடல் கொண்டது. இனிக் கடைச் சங்கமிருந்து தமிழாராய்ந்தார் சிறு மேதாவியாரும் சேந்தம் பூதனாரும் அறிவுடையரனாரும் பெருங்குன்றுார்க் கிழாரும் இளந்திருமாறனும் மதுரை ஆசிரியர் நல்லந்துவனாரும் மதுரை மருதனிளநாகனாரும் கணக் காயனார் மகனார் நக்கீரனாரும் எனத் இத் தொடக்கத்தார் நாற்பத்தொன்பதின்மர் என்ப. அவருள்ளிட்டு நானூற்று நாற்பத்தொன்பதின்மர் பாடினார் என்ப. அவர்களாற் பாடப்பட்டன நெடுந்தொகை நானூறும் குறுந்தொகை நானூறும், நற்றிணை நானுாறும், புறநானுாறும் ஐங்குறு நூறும், பதிற்றுப்பத்தும், நூற்றைம்பது கலியும், எழுபது பரிபாடலும், கூத்தும், வரியும், சிற்றிசையும், பேரிசையும் என்று இத் தொடக்கத்தன. அவர்க்கு நூல் அகத்தியமும் தொல்காப்பியமும் என்ப. அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது ஆயிரத்து ஐம்பதிற்றியாண்டு என்ப. அவர்களைச் சங்கம் இரீஇயினார் கடல் கொள்ளப்பட்டு போந்திருந்த முடத்திரு மாறன் முதலாக உக்கிரப் பெருவழுதி ஈறாக நாற்பத்தொன்ப தின்மர் என்ப. அவருட் கவியரங்கேறினார் மூவர் என்ப.அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது உத்தர மதுரை என்ப.” மேலே தந்துள்ள இறையனார் அகப்பொருள் உரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் புலவர் எண்ணிக்கையையும் ஆண்டு எண்ணிக்கையையும் அறியும்போது தலை சுற்றுகிறது. என்றா லும், நமக்கு இன்றியமையாது வேண்டப்படுகின்ற ஓர் உண்மை இப்பகுதியில் இல்லாமற் போகவில்லை இவ்வுரையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் செய்திகளுட் சில கற்பனையெனத் தோன்றலாம். முதற் சங்கம் 4,440 ஆண்டும், இரண்டாம் சங்கம்