பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியத்துக்கு முன் 99 ஆண்டுகட்கு முன் தோன்றியதாக ஆராய்ச்சியாளர் சிலர் அறி வித்திருப்பது ஈண்டு நினைவு கூரத்தக்கது. அடுத்து, - தலைச்சங்கம், இடைச்சங்கம் ஆகிய இரண் டிலுமே அகத்தியனார் இருந்ததாக அறிவிக்கப்பட்டிருப்பது நம்பத்தக்கதாயில்லை. அகத்தியனார் ஐயாயிரம் ஆண்டுக் காலம் உயிர் வாழ்ந்திருக்க முடியுமா? ஒருவேளை, அகத்தியனார் என்ற பெயரில் இருவர் இருந்தனர் என்று கொண்டால், இந்தக் கருத்து ஒருவாறு பொருந்தலாம். முதல் சங்கம் இருந்தது பழைய மதுரையாம். அதாவதுஇப்போதுள்ள மதுரைக்குத் தெற்கேயிருந்தது; பின்னர்க் கடலாற் கொள்ளப்பட்டது. இரண்டாவது சங்கம் இருந்தது கபாடபுரமாம். பழைய மதுரை கடல் கொள்ளப்பட்டதால் இடம் மாறிற்றுப் போலும். கடைச்சங்கம் இருந்தது இப்போ துள்ள மதுரை. இது, கடல் கொண்ட பழைய மதுரைக்கு வடக்கேயிருப்பதால் 'உத்தர மதுரை (உத்தரம்= வடக்கு) எனப்பட்டது. இடம் சார்பான இந்தச் செய்தியை ஏறக்குறைய ஏற்றுக்கொள்ளலாம். இனிமேல்தான் இன்றியமையாத ஒரு கட்டத்திற்கு நாம் வரவேண்டியவர்களாயுள்ளோம். முச் சங்கங்களிலும் பாடப் பட்டனவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் நூல்களின் பெயர்களை ஊன்றி நோக்க வேண்டும். முதல் இரண்டு சங்கங்களிலும் இயற்றப்பட்டனவாகக் கூறப்பட்டிருக்கும் நூல்கள் இன்று கிடைக்கவில்லை. கடைச்சங்க நூல்களாகக் குறிப்பிடப்பட்டுள் ளவற்றுள் முதல் எட்டு மட்டும் இப்போது கிடைத்துள்ளன; இறுதியாகக் குறிப்பிட்டுள்ள கூத்துக்', 'வரி', 'சிற்றிசை, பேரிசை ஆகிய நான்கு நூல்களும் இன்று கிடைக்கவில்லை. முச் சங்கங்கட்கும் உரியனவாகச் சில நூல்களின் பெயர்களைக் குறித்ததோடு உரையாசிரியர் அமைந்துவிடவில்லை. அப் பெயர்களைத் தொடர்ந்தாற்போல், இத் தொடக்கத்தன” என்று மேலும்கூறியிருப்பது கருதத்தக்கது. இத்தொடக்கத்தன. என்றால், இவை முதலாய பல நூல்கள்' என்று பொரு ளாம். உண்மைதானே? முச்சங்கங்களிலும் இருந்த 8,598 புலவர்களும் பன்னீராயிரம் ஆண்டுகளில், ஆயிரக்கணக்கான