பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 தமிழ் நூல் தொகுப்புக் கல்ை கண்டதற்கு இலக்கணம், என்றபடி, முன்பே வழக்காற்றில் இருந்துவந்த பரிபாடல்களைப் பார்த்த தொல்காப்பியர், பரிபாடல் என்றால் இப்படியிப்படி இருக்கும் என்று பொது இலக்கணம் வகுத்துவிட்டார். பரிபாடல் இலக்கணத்தைத் தொல்காப்பியம் - பொருள் அதிகாரம் - அகத்திணை இயலில் உளள, 'நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கம் கலியே பரிபாட்டு ஆயிரு பாவினும் உரிய தாகும் என்மனார் புலவர்.” - 56 என்னும் நூற்பாவாலும், தொல்காப்பியம் - செய்யுளியலில் உள்ள, ' நெடுவெண் பாட்டே குறுவெண் பாட்டே கைக்கிளை பரிபாட்டு அங்கதச் செய்யுளோடு ஒத்தவை எல்லாம் வெண்பா யாப்பின.” 114 ' பரிபா டல்லே தொகைநிலை வகையின் இதுபா என்னும் இயனெறி இன்றிப் பொதுவாய் கிற்றற்கும் உரித்தென மொழிப.” | 16 ' கொச்சகம் அராகம் சுரிதகம் எருத்தொடு செப்பிய நான்கும் தனக்குறுப் பாகக் காமங் கண்ணிய நிலைமைத் தாகும்.' 117 ' சொற்சீ ரடியும் முடுகிய லடியும் அப்பா நிலைமைக் குரியவாகும்.' 118 ' கட்டுரை வகையான் எண்ணொடு புணர்ந்து முற்றடி யின்றிக் குறைவுசீர்த் தாகியும் ஒழியசை யாகியும் வழியசை புனர்ந்தும் சொற்சீர்த் திறுதல் சொற்சீர்க் கியல்பே.” 119

  • பரிபா டல்லே

நாலி ரைம்பது உயர்படி யாக ஐயைங் தாகும் இழிபடிக்கு எல்லை.” 155