பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியத்துக்கு முன் 113 " முளரித் தீயின் முழங்கழல் விளக்கத்துக் களரி யாவிரைக் கிளர்பூங் கோதை வண்ண மார்பின் வனமுலைத் துயல்வர” (301) என்னும் அகநானுற்றுப் பாடற் பகுதியால் அறியலாம். தான் காதலித்த பெண்ணை மணந்து கொள்ளும் நோக்குடன் மடலேறும் காதலன், ஆவிரம் பூமாலையைத் தன் தலையிலும் மார்பிலும் அணிந்து கொள்வான் என்னும் செய்தியை, ' பிடியமை நூலொரு பெய்ம்மணி கட்டி அடர் பொன் அவிரேய்க்கும் ஆவிரங் கண்ணி' என்னும் கலித்தெகை (140) பாடல் பகுதியாலும், இதற்கு நச்சினார்க்கினியர் எழுதியுள்ள, ...தலையினும் மார்பினும் கிடக்கின்ற இவை தகடாகிய பொன்னினது விளக்கத்தை ஒக்கும் ஆவிரம் பூவாற் செய்த கண்ணியும் ...” என்னும் உரைப் பகுதியாலும் அறிந்து கொள்ளலாம், இன்னும் இதனை, " ...பனிவார் ஆவிரைப் பன்மலர் சேர்த்தித் தாருங் கண்ணியும் ததைஇ...” என்னும் குணநாற்பது பாடல் பகுதியாலும் அறியலாம். இந்த மாலையைக் காதலன் ஏறும் மடல்மாக் குதிரைக்கும் சூட்டுவது உண்டு என்னும் செய்தியை, -

  • பொன்னேர் ஆவிரைப் புதுமலர் மிடைந்த

பன்னூல் மாலைப் பனைபடு கலிமாப் பூண்மணி கறங்க ஏறி.” (173) என்னும் குறுந்தொகைப் பாடற் பகுதியால் அறியலாம் இதுகாறும் கூறியவற்றால், மக்களிடையேயும், புலவர்களிடை யேயும் ஆவிரம் பூவும் மாலையும் பெற்றிருந்த செல்வாக்கினை அறிய முடிகிறது. எனவேதான், கவர்ச்சியான பயனுள்ள பாடல்களின் தொகுப்பு நூலுக்கு, களரியாவிரை’ என்னும் பெயர் அன்று வைக்கப்பட்டது போலும்! களரியாவிரை' என்னும் முழுப் பெயர், களரியாவிரைக் கிளர்பூங் கோதை என அகநானூற்றில் அப்படியே குறிப்பிடப்பட்டிருப்பது ஈண்டு நுணுகி நோக்கி மகிழ்தற்குரியது.