பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியத்துக்கு முன் 119 வரலாறு, நக்கீரனாரே இந்த உரையின் முதல் ஆசிரியர் என் பதற்குத் தக்க அகச் சான்றாகும்.எனவே, நக்கீரனாரின் மரபின் வழிவழி வந்த தகுதிமிக்க ஒரு புலவரே, நக்கீரனாரின் உரை யுடன் முச்சங்கங்களைப் பற்றிய செய்திகளையும் இணைத்திருக் கிறார் என்பது தெளிவு. ஆகவே, மூன்று சங்கங்களிலும் தோன் றிய நூல்களைப் பற்றி இறையனார் அகப்பொருள் உரையில் குறிப்பிடப்பட்டுள்ள பகுதி, தகுதிமிக்க புலவர் ஒருவரால் எழுதப்பட்டதேயாகும். அவர் குறிப்பிட்டுள்ள நூல்கள் இன்று கிடைக்கவில்லை என்பதற்காக, அவற்றைக் கற்பனைப் பொருள் கள் என்று கூறிவிட முடியாது. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டுள்ள உரை நூல்கள் பலவற்றில் குறிப்பிடப் பட்டுள்ள உரை நூல்களேகூட இன்று நமக்குக் கிடைக்க வில்லையல்லவா? இவை இந்தப் பிற்கால உரையாசிரியர்களின் காலத்தில் இருந்தவையே. பின்னர் மறைந்து விட்டிருக்கின்றன. அவற்றுள் சிலவற்றை, இலங்கை சி.வை. தாமோதரம்பிள்ளை, உ. வே. சாமிநாதையர் முதலியோர் அண்மைக் காலத்தில் வெளிக் கொணர்ந்தனர். இதுபோலவே, இறையனார் அகப் பொருள் உரையில் குறிப்பிடப்பட்டுள்ள தலைச்சங்க நூல் களும் இடைச்சங்க நூல்களும் அந்த உரையாசிரியர் காலத்தில் ஆட்சியில் இருந்திருக்கும்; அவை பின்னர் மறைந்து போயின. எனவே, தலைச்சங்க காலத்துத் தொகைநூல்களாக இறையனார் அகப்பொருள் உரையில் எடுத்துக்காட்டப்பட் டுள்ள நூல்கள் தொல்காப்பியத்துக்குமுன் ஒரு காலத்தில் இருந் தவையே என்னும் உண்மையை, ஐயம் திரிபு இன்றி உறுதியாக நம்பலாம். இறையனார் அகப்பொருள் உரைப் பகுதியைக் கொண்டே முச்சங்க காலத்துத் தொகை நூல்களை அறிமுகம் செய்ய வேண்டி யிருத்தலின், இந்த உரை நூல் பற்றி இந்த த் தலைப் பில் இவ்வளவு விரிவாக எழுத நேர்ந்தது. இறையனார் அகப்பொருள் உரையை அடிப்படையாகக் கொண்டு இந்தச் செய்திகளைப் பின்வந்த சிலரும் எழுதியுள்ள னர் என்பதை ஈண்டு நினைவுபடுத்தாமல் விடுவதற்கில்லை. அடியார்க்கு நல்லார், சிலப்பதிகாரம் - வேனிற்காதை உரைப்