பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/179

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பன்னிருபடலம் 155 துச் சொல்லினும் இறந்தகாலத்துப் பிறபாசாண்டிகளும் மூன்று வகைச் சங்கத்து நான்கு வருணத்தொடுபட்ட சான் றோரும் அது கூறார் என்பது. என்னை? கடைச்சங்கத்தாருட் களவியற் பொருள் கண்ட கணக்காயனார் மகனார் நக்கீரர், 'இடைச் சங்கத்தார்க்கும் கடைச் சங்கத்தார்க்கும் நூலாயிற் றுத் தொல்காப்பியம் என்றாராகலானும், பிற்காலத்தார்க்கு உரையெழுதினோரும் அது கூறிக் கரிபோக்கினாராகலானும், அவர் புலவு துறந்த நோன்புடையாராகலாற் பொய்கூறாராக வானு மென்பது. இங்ங்னங் கூறாக்கால் இதுவும் மரபுவழு வென்று அஞ்சி அகத்தியர் வழித்தோன்றிய, ஆசிரிய ரெல்லா ருள்ளுந் தொல்காப்பியனாரே தலைவரென்பது எல்லாஆசிரிய ருங் கூறுப வென்பது; எங்ங்னமோ வெனின், “கூறிய குன்றினு முதனூல் கூட்டித் தோமின் றுணர்தல் தொல்காப் பியன்றன் ஆணையின் தமிழறிக் தோர்க்குக் கடனே.” இது பல்காப்பியப் புறனடைச் சூத்திரம். 'வீங்குகடல் உடுத்த வியன்கண் ஞாலத்துத் தாங்கா நல்லிசைத் தமிழ்க்குவிளக் காகென வானோர் ஏத்தும் வாய்மொழிப் பல்புகழ் ஆனாப் பெருமை அகத்தியன் என்னும் அருந்தவ முனிவன் ஆக்கிய முதனூல் பொருந்தக் கற்றுப் புரைதப வுணர்ந்தோர் கல்லிசை நிறுத்த தொல்காப்பியனும்' என்பதனால், அகத்தியர் செய்த அகத்தியதினை முதனுாலென வும், அவர் வானோர் ஏத்தும் வாய்மொழிப் பல்புகழ் ஆனாப் பெருமையுடையார் எனவும், அவராற் செய்யப்பட்ட முதனுால் பொருந்தக் கற்றுப் புரைதப உணர்ந்தோருள் தலைவராயி னார் தொல்காப்பியனார் எனவும், பன்னிரு படலத்துப் புனைந்துரை வகையாற் பாயிரச் சூத்திரத்துள் உரைக்கப்பட் டது, இனிப் பன்னிரு படலம் முதனூலாக வழிநூல் செய்த வெண்பாமாலை ஐயனாரிதனாரும் இது கூறினார்; என்னை? 'மன்னிய சிறப்பின் வானோர்வேண்டத் தொன்மலை யிருந்த சீர்சால் முனிவரன்