பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/178

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


154 தமிழ் நூல் தொகுப்புக் கலை வஞ்சி மேற் செல்லலானும், காஞ்சி அஞ்சாது எதிர்சென்று ஊன்றலானும், 'வஞ்சியும் காஞ்சியும் தம்முள் மாறே. உழிஞை ஆரெயில் முற்றலானும், நொச்சி விழுமிதின் அவ் வெயிற் காத்தலானும், "உழிஞையும் நொச்சியும் தம்முள் மாறே.' 'பொருதல் தும்பை புணர்வ தென்ப.' இவற்றின் விகற்பமெல்லாம் பன்னிரு படலத்துட் காண்க, புறப்புறமாவன: வாகையும் பாடாண் பாட்டும் பொதுவியல் திணையும் எனக் கொள்க......... இவை ஆமாறு வெண்பா மாலையுள்ளும் பன்னிரு படலத்துள்ளும் காண்க.” என்னும் உரைப் பகுதியால், யாப்பருங்கல விருத்தி பன் னிரு படலச் செய்திகளைத் தவறென மறுக்கவில்லை-ஏற்றுக் கொண்டுள்ளது என்பது புலனாகும். இளம்பூரணரும் நச்சி னார்க்கினியரும் பன்னிருபடலச் செய்திகள் தவறானவை என்று சுட்டிக் காட்டியிருப்பதை ஈண்டு நினைவுகூரவேண்டும். யாப்பருங்கல விருத்தியில் பன்னிரு படலத்திற்கு மறுப்பு இன் மையால், பன்னிரு படலத்தில் தொல்காப்பியர் பெற்றிருக்கும் பங்குக்கும் மறுப்பு இராது என உய்த்துணரலாம். இனிப் பேராசிரியர் பக்கம் திரும்பிப் பார்ப்போம். தொல் காப்பியம் மரபியலில் உள்ள - "வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதல்நூ லாகும்’ (94) என்னும் நூற்பாவின் கீழ்ப் பேராசிரியர் எழுதியுள்ள, “...எனவே, அகத்தியமே முற்காலத்து முதனூல் என்ப து உம், அதன் வழித்தாகிய தொல்காப்பியம் அதன் வழிநூல் என்பது உம் பெற்றாம். என்றார்க்கு முந்து நூல் எனப்பட்டன முற்காலத்து வீழ்ந் தன வெனக் கூறித் தொல்காப்பியர் அகத்தியத்தோடு பிறழ வும், அவற்று வழிநூல் செய்தார் என்றக்கால் இழுக்கென்னை யெனின், - அது வேதவழக்கொடு மாறுகொள்வார் இக்காலத்