பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பன்னிருபடலம் 171 வினது; நற்காமம் அன்றாம் ஆகலின். இக் கருத்தினானே, இதனைப் புறத்திணையுட் கொண்டாரும் கைக்கிளைப் படலத்து; 'நெஞ்சிற் குரைத்தலும் கேட்போர் இன்றி அந்தர மருங்கிற் கூறலும் அல்லது சொல்லலும் கேட்டலும் இல்லை யாக அகத்திணை மருங்கின் ஐவகை யானும் இகத்தல் என்ப இவ்வயினான என்றார் எனக் கொள்க.” என்னும் உரைப்பகுதியாலும், செய்யுளியலில் உள்ள புற நிலை வாயுறை என்று தொடங்கும் (161 ஆம்) நூற்பாவின் கீழ் அவர் எழுதியுள்ள, '.இக் கருத்தினான் வெண்பா அடிவரையில வாயினும் ஆசிரிய அடி மூன்றிகவா என்பது கைக் கிளைப் படலத்துள்ளுஞ் சொல்லப்பட்டது; என்னை? 'முச்சீர் எருத்திற் றாகிமுட் டின்றி எச்சீ ரானும் ஏகாரத் திறுமே." என்றா ராகலின்...” என்னும் உரைப்பகுதியாலும், கைக்கிளைப் படலத்தைச் சேர்ந்த மூன்று நூற்பாக்களை அறியமுடிகிறது. ஆனால்,பேராசிரியர் மூன்று இடங்களிலுமே வெற்றுபடியாகக் கைக் கிளைப் படலம்’ என்றுதானே குறிப்பிட்டுள்ளார்; பன்னிரு படலம் என்றோ பன்னிரு படலக் கைக்கிளைப் படலம் என்றோ அவர் குறிப்பிடவில்லையே! எனவே, இந்தக் கைக்கிளைப் படலத்தைப் பன்னிரு படலத்தின் கைக்கிளைப் படலம் என்று எவ்வாறு கொள்ள முடியும்? கைக்கிளைப் படலம் என்னும் ப்ெயரில் வேறொரு தனிநூல் இருக்கலாம் அல்லவா?- என்றெல் லாம் இங்கே ஐயப்பாடு எழலாம். இதற்குத் தெளிவு காண வேண்டும்: ‘கைக்கிளைப் படலம் என்னும் பெயரில் வேறு தனிநூல் இருப்பதாக அறியப்படாமையின், பேரசிரியரால் குறிப்பிடப் பட்டுள்ள கைக்கிளைப் படலம் என்பது, பன்னிரு படலத்தின்