பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 தமிழ் நூல் தொகுப்புக் கலை கற்றறிந்தோர் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று இத்திறத்து எட்டுத் தொகை.”. என்னும் பழைய பாடலால் அறியலாம். நற்றிணை, குறுந் தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித் தொகை. அகநானூறு, புறநானூறு என்பன எட்டுத்தொகை நூல்கள் என்பது இதன் பொருள். தொகை பத்துப்பாட்டு நூல்களைப் 'பாட்டு என்னும் பெயரால் பொதுவாக - சுருக்கமாக வழங்குதல் போலவே, எட்டுத் தொகை நூல்களையும் தொகை என்னும் பெயரால் பொது வாக-சுருக்கமாக வழங்குவது உண்டு. இதனை, ப்ேராசிரியர் உரையிலிருந்து முன்பு ஓரிடத்தில் காட்டியுள்ள, "...பாட்டினும் தொகையினும் வருமாறு கண்டுகொள்க (செய்யுளியல்-50)', 'பாட்டினும் தொகையினும் அவற்றை நாட்டிக் கொண்டு...பாட்டினும் தொகையினும் உள்ள சொல்லே ...(செய்யுளியல் - 80)' என்னும் பகுதிகளால் அறியலாம். இன்னும் இதனை, செய்யு ளியலில், பரிபாடல்லே என்று தொடங்கும் (162-ஆம்) நூற் பாவிற்கு நச்சினார்க்கினியர் எழுதியுள்ள, 'இது முறையே பரிபாடற்கு எல்லை கூறுகின்றது. பரி பாடற்கு உறுப்பாகிய வெண்பாவும் பொதுப்பாவும் நானூறடிப் பெருக்கத்திற்கு எல்லையாகவும் இருபத்தைத் தடிச் சுருக்கத்திற்கு எல்லையாகவும் பெறும் என்றவாறு அவை தொகையுட் காண்க’ என்னும் உரைப்பகுதியால் தெளிவாக அறியலாம். பரி பாடலுக்கு இலக்கணம் கூறும் இந்நூற்பாவின் உரையில் நச்சினார்க்கினியர் தொகை என்று குறிப்பிட்டிருப்பது எட்டுந் தொகையாகும்.இந்த எட்டுத் தொகைநூல்களுள் பரிபாடலும் ஒன்றல்லவா? மற்றும், அகத்திணையியலில் உள்ள "மாயோன் மேய காடுறை யுலகமும் என்று தெடங்கும் (5ஆம்) நூற். பாவின் கீழ்,