பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/232

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


208 தமிழ் நூல் தொகுப்புக் & ଛ୩ ଔ) என்னும் பகுதியால் அறியலாம். ஆறாவது நூலாகிய பதிற்றுப் பத்தும், எட்டாவது நூலாகிய பரிபாடலும் முழுமை யும் கிடைக்காமையால், இறுதியில் இருக்கக்கூடிய தொகுத்தவர் பெயரும் தொகுப்பித்தவர் பெயரும் அறிய முடியவில்லை. புறநானூறு, பதிற்றுப் பத்து, பரிபாடல் என்னும் மூன்று நூல்கட்கும் இருதரத்தார் பெயர்களும் தெரியவில்லையாயி னும், மற்ற ஐந்து நூல்களையும் தொகுத்தவரும் தொகுப்பித் தவருமாக அறியப்பட்டிருப்பவர்கள் மொத்தம் எழுவராவர். இந்த எழுவருமே கடைச்சங்க காலத்தவர். இவர்களுள் மூவர் மன்னர்கள்; பாண்டியன் உக்கிரப் பெருவழுதி, பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி என்னும் இருவரும் பாண்டிய மன்னர்கள்; யானைகட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை யார் சேர வேந்தர். இவ் வெழுவருள் நால்வர் பர்டல்கள் எட்டுத் தொகை நூல்களில் உள்ளன. உக்கிரப் பெருவழுதி பாடிய பாடல்கள் அகநானூற்றில் (26) ஒன்றும், நற்றிணை யில் (98) ஒன்றுமாக இரண்டு உள்ளன. பன்னாடு தந்த பாண் டியன் மாறன் வழுதி இயற்றிய பாடல்கள், பாண்டியன் பன் னாடு தந்தான்’ என்னும் பெயரில் குறுந்தொகையில் (270) ஒன்றும், பாண்டியன் மாறன் வழுதி என்னும் பெயரில் நற்றிணையில் (97) ஒன்றுமாக இரண்டு உள்ளன. பாண்டியன் பன்னாடு தந்தானும், பாண்டியன் மாறன் வழுதியும், பன் னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி என்னும் ஒருவராகத் தான் இருக்கக்கூடும். கூடலூர் கிழார் இயற்றிய பாடல்கள் குறுந்தொகையில் (166, 167, 214) மூன்றும், புறநானூற்றில் (229) ஒன்றுமாக நான்கு உள்ளன. நல்லந்துவனார் இயற்றிய பாடல் அகநானூற்றில் (43) ஒன்று உள்ளது, நற்றிணையில் (88) ஒன்று உள்ளது; பரிபாடலில் (6, 8, 11, 20) நான்கு பாடல் கள் உள்ளன, அன்றியும், கலித்தொகையில் உள்ள நெட் , ல் கலிப்பகுதி முழுவதும் (33-பாடல்களும்) நல்லந்துவனா . படைப்பே யாகும். - எழுவருள், பாடல்கள் இயற்றியுள்ள நால்வர் போக, மற்ற மூவருள் உருத்திரசன்மர் ஒருவர், இவரைப் பற்றி ஏதேதோ கதை சொல்லப்படுகிறது. இறையனார் அகப்பொருளுக்குச்