பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/234

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


210 - தமிழ் நூல் தொகுப்புக் கலை கா. சுப்பிரமணியப் பிள்ளையவர்கள் (M.L. பிள்ளை) மொழிந்துள்ளனர். கால ஆண்டு பற்றிக் கருத்துவேறுபாடு இருப்பினும், கடைச் சங்க காலத்தவர் என்பது உறுதி எனவே, தொகுத்தவர்கள். தொகுப்பித் தவர்கள் என அறியப்படும் எழுவருமே கடைச்சங்க காலத்தவர் என்பது புலனாகும். - இதுகாறும் கூறியவற்றால், பத்துப்பாட்டு எட்டுத் தொகை நூல்களைக் கடைச் சங்கத்தார் தொகுத்ததாக நச்சினார்க்கினியர், பேராசிரியர் முதலிய அறிஞர்கள் கூறி யிருப்பது சாலவும் பொருந்தும் என்பதும், இவற்றைத் தொகுத்த காலத்தை, கி.பி. நான்காம் நூற்றாண்டுவரையும் இக்கால ஆராய்ச்சியாளர் சிலர் தள்ளிப் போட்டுக்கொண்டு போவது சிறிதும் பொருந்தாது என்பதும் முற்றமுடிந்த முடிபாகும். சுருங்கக் கூறின், கி.பி. முதல் நூற்றாண்டிற்குள் இவை தொகுக்கப்பட்டிருக்க வேண்டும். இங்கே, இன்னொரு செய்தியையும் அறிவிக்கக் கடமைப் பட்டுள்ளோம். கி.பி. முதல் நூற்றாண்டிற்குள் இவை தொகுக்கப் பட்டிருக்க வேண்டும் என்று கூறியது போலவே கி.மு. நான்காம் நூற்றாண்டிற்குப் பின்பே இவை தொகுக் கப்பட்டிருக்க வேண்டும் என்னும் செய்தியையும் தெரிவிக்க, வேண்டும். இதற்குரிய சான்றாவது: பர்ட்லிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு மகதநாட்டை யாண்ட நந்தரைப் பற்றிய செய்தி நெடுந்தொகை என்னும் அகநானூற்றுப் பாடல்கள் இரண்டில் சொல்லப்பட்டுள்ளது. நந்தமன்னர் தம்மிடம் மிக்கிருந்த மணி, பொன் முதலான செல்வங்களைப் படையெடுத்து வரும் மாற்றார் கைப்பற்றா மல் காப்பதற்காக, அவற்றை வன்மையான ஒரு பெட்டியில் இட்டுப் பூட்டி, கங்கையாற்றிடையே ஒரு சுருங்கை அறை கட்டி, அதில் மறைத்து வைத்ததாக வரலாறு கூறுகிறது. இந்த வரலாற்றுச் செய்தியினை, அகநானூற்றில் உள்ள, பல் புகழ் கிறைந்த வெல்போர் நந்தர் சீர்மிகு பாடலிக் குழீஇக் கங்கை (265).