பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எட்டுத் தொகை 215 யாது. இன்னும் மிகுதியாகவும் கிடைத்திருக்கும். ஆயினும், மேற்கூறிய அகப்பொருள் தொகை நூல்கள் மூன்றும் இந்தப் புறநானூறும் ஒத்த எண்ணிக்கையில் அமையும்படி (Adjustment) சரி செய்யப்பட்டிருக்க வேண்டும், புறநானூற்றைத் தொகுத்தவர் பெயரும் தொகுப்பித்தவர் பெயரும் அறியப் படவில்லையாதலின், பொதுவாக இந்தப் பொறுப்பைச் சங்கத்தார் தலையிலேயே போட்டுவிடவேண்டும். கானூறு மேற்கூறிய நான்கு தொகை நூல்களிலும் நானுாறு பாடல் கள் வீதம் சேர்த்திருப்பது இயற்கையாய் நிகழ்ந்த செயலாகத் தான் இருக்கவேண்டும். நானூறு என்னும் எண்ணில் ஏதோ மாண்பு (மகிமை) இருக்கிறது' என்று எண்ணி இவ்வாறு செய்திருக்க முடியாது. சிறந்தனவாகத் தேர்ந்தெடுத்துக் கிடைக்கப்பெற்ற பாடல்களைப் பகுக்குங்கால், இந்த வீதம் விகிதம் இயற்கிையாய் அமைந்திருக்கிறது. வேண்டுமானால் ஒன்று சொல்லலாம்: அகப்பொருள் பாடல்கள் ஆயிரத்திரு. நூறு கிடைக்க அவற்றை நானு று வீதம் மூன்று நூல்களாகத் தொகுக்கவேண்டி வந்ததால், பின்னர்ப் புறப்பொருள் பாடல் களிலும் சிறந்த நானுாறைத் தேர்ந்தெடுத்துப் புறநானூறு என்னும் பெயரில் ஒரு நூல் உருவாக்கினர் எனலாம். அல்லது, -புறப்பாடல்கள் ஏறக்குறைய நானுாறு தோன்றிய்தால், அவற்றை ஒரு தொகையாக்குவது என்றும், அதைப்போலவே, அகப்பாடல்களையும் நானூறு வீதம் சரி செய்து தொகை யாக்குவதென்றும் திட்டமிட்டுச் செய்திருக்கலாம். இங்கே இன்னொன்றும் கருதத்தக்கது: இந்த நான்கு தொகை நூல்களிலும் நானூறு பாடல்கள் இருப்பதைக் கண்ட தால், நானுாறு பாட்ல்கள் கொண்ட நூல் உருவாக்கும் மரபு பின்னர்த் தோன்றியிருக்கிறது. கீழ்க்கணக்கு நூல்களாகிய நாலடியார், பழமொழி என்னும் இரண்டும் நானூறு-நானூறு பாடல்களைக் கொண்டிருப்பது இதற்கு எடுத்துக் காட்டாகும். இதுகாறும் கூறிய செய்திகளை அடிப்படையாகக் கொண்டு நோக்கின், நெடுந்தொகை, குறுந்தொகை, நற்றிணை, புற