பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/248

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


14. நெடுந்தொகை இந்நூல், இறையனார் அகப்பொருள் உரையில், நெடுந் தொகை நானூறு' என்னும் பெயரால், எட்டுத்தொகை நூல் களுள் முதலாவதாக நிறுத்தப்பெற்றுள்ளது. பேராசிரியர், நச்சினார்க்கினியர் போன்றோரும் இதனையே முதல் தொகை நூலாகக் குறிப்பிட்டுள்ளனர். இந்த நூல், நெடுந்தொகை என்னும் பெயருடன், அகம், அகப்பாட்டு, அகநானூறு என்னும் பெயர்களாலும் வழங்கப்பட்டு வருகிறது. நெடுங்தொகை இந்த நூலுக்கு நெடுந்தொகை என்னும் பெயர் உண்மையை, இறையனார் அகப்பொருள் உரையாலும், "நெடுந்தொகை முதலாகிய தொகையெட்டும் என்றவாறு - என்னும் பேராசிரியர் (செய்யுளியல் - 236) உரைப்பகுதி யாலும், அவை நெடுந்தொகை முதலிய தொகை எட்டுமாம் -என்னும் நச்சினார்க்கினியரின் (செய்யுளியல் - 236) உர்ைப் பகுதியாலும் அறியலாம் என்னும் செய்தி முன்னரே ஒரிடத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்சி இன்னும் சில இடங்களில் உள்ளது என்பதற்கு ஒர் எடுத்துக் காட்டாக நச்சினார்க்கினி யரின் உரைப்பகுதி யொன்றினைக் காண்ப்ாம்: தொல்காப் பியம்-அகத்திணையியலில் நாடக வழக்கினும் உலகியல் வழக் கினும்' என்று தொடங்கும் (53 ஆம்) நூற்பாவின்கீழ், நச்சி னார்க்கினியர் எழுதியுள்ள, "ஆசிரியமும் வெண்பாவும் வஞ்சியும் அகம் புறம் என்னும் இரண்டிற்கும் பொதுவாய் வருமாறு நெடுங் தொகையும் புற மும் கீழ்க்கணக்கும் மதுரைக் காஞ்சியும் பட்டினப்பாலையும் என்பனவற்றுட் காண்க" இந்த உரைப்பகுதியில், புறநானு ற்றைப் புறம் எனவும் அகநானூற்றை நெடுந்தொகை எனவும் நச்சினார்க்கினியர் குறிப்பிட்டிருப்பது காண்க. இதற்கு இன்னும் தக்க அகச்சான்று வேண்டுமெனில், அகநானூற்றின் பாயிரப் பாடல்கள் இரண்டில்