பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/249

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நெடுந்தொகை 225 காணலாம். நின்ற நீதி' என்று தொடங்கும் நீளமான பாயிரப் பாடலின் இடையேயுள்ள, - 'முன்னினர் தொகுத்த நன்னெடுத் தொகைக்குக் கருத் தெனப் பண்பினோர் உரைத்தவை நாடின் என்னும் பகுதியில், நெடுந்தொகை என்னும் பெயர் அறிமுகப்படுத்தப் பட்டிருப்பது காண்க. மற்றும், 'வியமெல் லாம் என்று தொடங்கும் பாயிரப் பாடலின் இறுதியிலுள்ள, தொகையில் நெடியதனைத்தோலாச் செவியான் வகையி னெடியதனை வ்ைப்பு என்னும் பகுதியிலுள்ள தொகையில் நெடியதனை என்பதில் 'நெடுந்தொகை என்னும் பெயர் மாற்றுருவத்தில் மன்ற்ந்து கொண்டிருப்பது காண்க. இந்த நெடுந்தொகை என்னும், பெயர், நீண்ட நாளாக, மக்களிடையேயும் ஆட்சியில் இருந் திருக்கிறது. இதனை, அகநானூற்று ஒலைச் சுவடி ஒன்றின் இறுதியில் எழுதப்பட்டுள்ள, a " Los . . . " "ஆறு நாட்டுக்குச் சேர்ந்த பெரும் பழனையில் இருக்கும் நல்லையப் புலவர் மகன் பொன்னையன் நெடுங்தொகை." என்னும் பகுதியால் அறியலாம். அஃதாவது, இந்த ஒலைச் சுவடி பொன்னையன் என்பவருடையது, அதில் நூற்பெயர் "நெடுந்தொகை எனக் குறிக்கப்பட்டுள்ளது. பொன்னையனது ஊராகிய பெரும் பழனை' என்பது, திருநெல்வேலி மாவட் டத்தைச் சேர்ந்த பெரும் பழஞ்சி' என்ற ஊராயிருக்கலாம். என்று கருதப்படுகிறது. நெடுங் தொகை நானூறு இந்த நூல் இறையனார் அகப்பொருள் உரையில் நெடுந் தொகை நானூறு' என எண்ணளவுடன் குறிப்பிடப்பட்டி ருப்பது போலவே, அகநானூற்றின் இறுதியிலுள்ள பாயிரச். செய்யுளை அடுத்திருக்கிற உரைப்பகுதியிலும் கூறப்பட்டுள்ளது. "நெடுந்தொகை நானூறும் கருத்தினோடு முடிந்தன." இவை பாடின கவிகள் நூற்று நாற்பத்தைவர்."