பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடுந்தெ ை: 229 பிழியக் கண்டனன் இவனென'வலையல்வாழி வேண் Lఉrmg” என்றது, தலைவி புறத்துப் போகக் கண்டு செவிலி கூறிய தனைத் தோழி கொண்டு கூறினாள்."-எனவரைந்துள்ளார் (4) கற்பியலில், வினை.வயிற் பிரிந்தோன் என்று தொடங் கும் (53 ஆம்) நூற்பாவின் கீழ், இருந்த வேந்தன்' என்று தொடங்கும் அகநானூற்றுப் (384) பாடலைக் குறிப்பிட்டு அதி லிருந்து ஏழு அடிகளையும் எடுத்துக் காட்டி, இருந்த வேந்தன் அருந்தொழில் முடித்தென என்னும் அகப்பாட்டினுள், புரிந்த காதலொடு பெருந்தேர் யானும்...... உரைமதி வாழியோ வலவ! (7 அடிகள்) என உள்ளம் போல உற்றுழி உதவிற்று எனத் தலைவன் கூறியவாறு காண்க"என்று கூறியுள்ளார். - (5) பொருளியலில் நோயும் இன்பமும்’ என்று தொடங்கும் (2 ஆம்) நூற்பாவின்கீழ், அன்றவண் ஒழிந்தன்றும் இலையே’ என்னும் அகநானூற்றுப்” (19-ஆம்) பாடலிலிருந்து ஏழு அடி களை எடுத்துக் காட்டி, - 'அன்றவண் ஒழிந்தன்றும் இலையே' என்னும் அகப்பாட்டி னுள், வருந்தினை வாழியென் நெஞ்சே ... ... செல்வினிக் சிறக்கநின் னுள்ளம் (7 அடிகள்) என அறிவுடையது போல் அழுகைபற்றிக் கூறிற்று'-என்று வரைந்துள்ளார். இவ்வாறு இன்னும் சில நூல்களிலிருந்து பல சான்றுகள் தரலாம். அகநானூற்றை ,"அகப்பாட்டு' என வழங்கும் பழக்கம், தொல்காப்பியத்தின் வாயிலாகக் கற்றுக் கொள்ளப் பட்டது எனக் கூறலாம். தொல்கர்ப்பியம் - செய்யுளியலில் அவைதாம் பாஅ வண்ணம் தாஅ விண்ணம் என்று தொடங் கும் (205-ஆம்) நூற்பாவின் இடையே உள்ள அகப்பாட்டு வண்ணம், புறப்பாட்டு வண்ணம்’ என்னும் பகுதியிலும், "அகப் பாட்டு வண்ணம், முடியாத் தன்மையின் முடிந்ததன் மேற்றே, என்னும் (செய்யுளியல் - 215) நூற்பாவிலும், அகப்பாட்டு என்னும் பெயர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள்தின்றோ? இதைக் கொண்டு, அகநானூற்றை அகப்பாட்டு' எனக் கூறும் வழி காற்றைப் பிற்காலத்தார் கற்றுக் கொண்டிருக்கலாம் அல்லவா?