பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/255

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நெடுந்தொகை 231 'முன்னினர் தொகுத்த நன்னெடுங் தொகைக்குக் கருத்தெனப் பண்பினோர் உரைத்தவை நாடின் அவ்வகைக் கவைதாம் செவ்விய வன்றி அரியவை யாகிய பொருண்மை நோக்கிக் கோட்ட மின்றிப் பாட்டொடு பொருந்தத் தகவொடு சிறந்த அகவல் நடைய்ால் கருத்தினி தியற்றி யோனே பரித்தேர் வளவர் காக்கும் வளநாட் டுள்ளும்' நாடெனச் சிறந்த பீடுகெழு சிறப்பிற் கெடலருஞ் சிறப்பின் இடையள நாட்டுத் தீதில் கொள்கை மூது ருள்ளும் ஊரெனச் சிறந்த சீர்கெழு மணக்குடிச் செம்மை சான்ற தேவன் தொன்மை சான்ற நன்மை யோனே.” “இத் தொகைக்குக் கருத்து அகவலாற் பாடினான், இடையள நாட்டு மணக்குடியான் LITುಕT 5T G5ಣ್ಣು TT60 வில்லவதரையன். நெடுந்தொகை நானூறும் கருத்தினோடு முடிந்தன. இவை பாடின கவிகள் நூற்று நீாற்பத்தைவிர். இத் தொகைப் பாட்டிற்கு அடியளவு சிறுமை பதின் மூன்று; பெருமை முப்பத் தொன்று. தொகுப்பித்தான் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி. தொகுத்தான் மதுரை உப்பூரி குடிகிழார் மகனாவான் உருத்திர சன்மன் என்பான். வண்டுபடத் ததைந்த கண்ணி என்பது முதலாக, நெடு வேண் மார்பின் என்பது ஈறாகக் கிடந்த பாட்டு நூற்றிரு பதும் களிற்றியானை நிரை யெனப்படும். இப்பெயர் காரணத் தாற் பெற்றது; இது பொருட் காரணமாகக்கொள்க. நாதகை' யுடைய நெஞ்சே என்பது முதலாக நாள் வலை முகந்த என்பது ஈறாகக் கிடந்த பாட்டு நூற்றெண்பதும் மணிமிடை பவளம் எனப்படும். இதுவுங்காரணப் பெயர்; என்னை, செய், யுளும் பொருளும் ஒவ்வாமையால். வறணுறு செய்தி என்பது முதலாக நகை நன் றம்ம’ என்பது ஈறாகக் கிடந்த பாட்டு நூறும் நித்திலக் கோவை யெனப்படும்; செய்யுளும் பொருளும் ஒக்குமாகலான்.'