பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 தமிழ் நூல் தொகுப்புக் கலை என்னும் அகநானூற்றுப் (304-ஆம்) பாடல் பகுதியிலும் இடம் பெற்றுள்ளது. முதல் பாட்டிலாயினும் பவளமொடு மணி மிடைந்தன்ன என்ற தொடர் உள்ளது; இரண்டாம் பாட் டிலோ மணி மிடை பவளம்' என்னும் தொடர் அப்படியே உள்ளது. இந்தத் தொடரின் அறிமுகத்தைக் கொண்டே மணி மிடை பவளம், என்னும் பெயரைக் கற்றுக் கொண்டிருக்கக் கூடும். ஆனால், இங்கேயுள்ள வியப்பிற்கு உரிய செய்தி என்ன வெனில், மணிமிடை பவளம் பற்றிப் பேசும் அகநானூற்றுப் பாடல்கள் இரண்டுமே, 'மணிமிடை பவளம் என்னும் தொகுப் பினுள் இல்லாததுதான்! மேலே காட்டியுள்ள இரண்டனுள் முதல் பாட்டு களிற்றியானை நிரையிலும், இரண்டாவது பாட்டு நித்திலக் கோவையிலும் உள்ளன. இதற்கு என்ன செய்வது! ஆக, அகநானூற்றின் நடுவேயுள்ள குறிப்பிட்ட நூற்றெண் பது பாடல்களின் தொகுப்புக்கு, மணி மிடை பவளம் எனப் பெயர் வைத்ததற்கு ஏதாவது ஒரு காரணம் இருக்கவேண்டும்; இல்லாவிடினும், நாம் ஏதாவதொரு காரணம் - தக்கதாய்ச் சொல்லியாக வேண்டும். நீலமணியும் செம்பவளமும் ஆகிய இருவேறு வகைப்பட்ட மணிகளால் ஆன மாலை போல, நடையாலும் கருத்து வெளிப்பாட்டாலும், இரு வேறு வகைப் பட்ட பாக்களின் தொகுப்புக்கு ‘மணிமிடை பவளம் என்னும் பெயர் உவமையாகு பெயரால் வழங்கப்பட்டது என்பதாக ஒரு காரணம் சொல்லலாம். இந்தக் கண்கொண்டு மணிமிடை பவளச் செய்யுட்களை நுணுகி நோக்கி ஆராய்வார்க்கு உண்மை புலப்படாமற் போகாது. பிற்காலத்தில் தமிழ்ச் சொற்களும் வடமொழிச் சொற்களும் மாறிமாறிக் கலந்து எழுதப்பட்ட நடை, ‘மணிப் பவள தடை (மணிப் பிரவாளம்) என வழங் கப்பட்டது. ஈண்டு ஒப்பு நோக்கற் பாலது. அகநானூறு தொகுத்தவர், முதலில் நூற்றிருபது பாடல் களைச் சீர்செய்து முதல் பாகம் போலக் கருதிக் களிற்றி யானை நிரை என்னும் பெயர் ஈந்தார். பின்னர், அடுத்த நூற்றெண்பது பாடல்களை ஆய்வு செய்து ஒழுங்கு படுத்தி 'இரண்டாம் பாகம் போலக் கருதி மணி மிடை பவளம் என் னும் பெயர் சூட்டினார், r.