பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/262

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


17. கித்திலக் கோவை மூன்றாவது பிரிவாகிய நித்திலக் கோவையைப் பற்றி, அக்நானூற்றுப் பாயிரச் செய்யுளின் பின்னால், 'வறனுறு செய்தி என்பது முதலாக, நகை நன்றம்ம" என்பது ஈறாகக் கிடந்த பாட்டு நூறும் நித்திலக் கோவை யெனப்ப்டும்; செய்யுளும் பொருளும் ஒக்குமாகலான்” -என்று வரையப் பட்டுள்ளது. இந்தப் பெயர்க் காரணமும் தெளிவாயில்லை. நித்திலம்=முத்து; கோவை=கோக்கப்பட்ட цртара): நித்திலக் கோவை=முத்து மாலை, ஓரின மணியாகிய முத்துக் களால் கோக்கப்பட்ட முத்து மாலை போல, நடையாலும் கருத்து வெளிப்பாட்டாலும் ஒத்த இயல்புடைய பாக்களால் தொகுக்கப்பட்ட நூலுக்கு நித்திலக் கோவை’ என்னும் பெயர் உவமையாகு பெயராய் வழங்கப் பெற்றுள்ளது. மணி மிடை பவளம்போல இருவேரு வகையின்றி ஓரினமாய் இருத்தலின் "...பாட்டு நூறும் நித்திலக் கோவை யெனப்படும்; செய்யுளும் பொருளும் ஒக்குமாகலான்’- எனப் பாயிரப் பகுதியில் கூறப் - பட்டுள்ளது; அஃதாவது, ஏதோ ஒரு வகையில் ஒற்றுமைகாட் டப் பாயிரப்பகுதி முயன்றுள்ளது. . . அகநானூறு தொகுத் தவர், முதல் முன் நூறு பாடல்களை யும் ஒழுங்கு செய்து இரண்டு பாகங்கள்' போல் களிற்றி யானை நிரை, மணிமிடை பவளம் என்னும் பெயர்கள் தந்து பிரிவினை செய்த பின்னர், இறுதி நூறு பாடல்களையும் ஆய்ந்து சீர்செய்து, மூன்றாம் பாகம் போலக் கருதி, நித்திலக் கோவை என்னும் பெயர் வழங்கினார். களிற்றியானை நிரை, மணிமிடை பவளம் ஆகியவற்றைப் போல, நித்திலக் கோவையும் ஒரு தனிநூல் மாதிரியே மதிக்கப் பெற்றுள்ளது. நச்சினார்க்கினியர் தமது உரையில் நித்திலக் கோவை என்னும் பெயரையும் விதந்து குறிப்பிட்டுள்ளார். எடுத்துக் காட்டொன்று வருமாறு:- - தொல்காப்பியம்-களவியலில் 'நாற்றமும் தோற்றமும் ஒழுக்கமும் உண்டியும் என்று தொடங்கும் (23-ஆம்) நூற்பா