பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/263

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நித்திலக் கோவை 239 வின் கீழ், 'கான மானதர் யானையும் வழங்கும்’ என்று தொடங்கும் அகநானூற்றுப் (318-ஆம்) பாடல் முழுவதையும் தந்து, அதன் கீழே, என்னும் 'கித்திலக் கோவை யுள், வரினே ஏமுறு துயரம் நாமிவ னொழிய, நின்னாப் பயிர் குறிநிலை, கொண்ட கோட்டை, ஊதல் வேண்டுமாற் சிறிது’ என்றவாறு நித்திலக் கோவை என்னும் பெயரை விதந்து கூறியுள்ளார். எண் வே, நித்திலக் கோவையையும் ஒரு தனித் தொகை நூலாகக் கூறலாம். - நானூறு பாடல்கள் 'விதம் கொண்ட குறுந்தொகையிலும், நற்றிணையிலும் எந்தப் பிரிவும் இல்லாதிருக்கவும், அகநானூற் றில் மட்டும் மூன்று பிரிவுகள் இருப்பது, ஒருவகைச் சிறந்த தொகுப்புக் கலையாகும். தொகை நூல்களுக்குள் இது முதலிலே தொகுக்கப்பட்ட தாதலின், இவ்வாறு பிரிக்க நேர்ந்தது எனலாம். நானூறு பாடல்களையும் ஒருசேரப் படிப் பது மலைப்பாயிருக்கு மாதலானும், பகுதி பகுதியாகப் பிரித்து விட்டால் படிப்பதற்கும் கையாள்வதற்கும் (கையில் வைத்துப் பயன்படுத்துவதற்கும்) எளிதாயிருக்கு மாதலானும், இந்தப் பிரிவில் உள்ள பாடல் எனப் பாடல்களைச் சுட்டியறிவுறுத்து வதற்கு வசதியாய் இருக்கு மாதலானும், இன்னபிற காரணங் களாலும் அகநானூறு மூன்றாகப் பிரிக்க்ப் பெற்றிருக்கலாம். மூன்றாகப் பிரித்தது பெரிதில்லை. மூன்று பிரிவுக்கும் களிற்றி யானை நிரை, மணி மிடை பவளம், நித்திலக் கோவை என் னும் எடுப்பான,கவர்ச்சியான இனிய பெயர்களை வழங்கி யிருப்பது ஒரு பெரிய கலைக்கூறாகும். தொகுத்த முறை அகநானூறு தொகுத்த முறையில் வியத்தற்கும் நயத்தற்கும் உரிய வேறொரு கலைத்திறன் உள்ளது. அகத் திணை குறிஞ்சி, முல்லை, மருதம், தெய்த ல், பாலை என ஐந்து வகைப்படும் என்பதும், இந்த ஐந்தும் அக்ன் ஐந்திணை’ எனப்படும் என்பதும் அறிந்த செய்திகளே இந்த ஐந்து திணைகளையும் பற்றிய நானுாறு. பாடல்களைக் கொண்டது அகநானூறு. இந்நூலில் உள்ள நானூறு பாடல் தளும் ஐந்து திணைகளுக்கும் பங்கிடப் பட்டிருக்கும் முறை