பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/264

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


240 தமிழ் நூல் தொகுப்புக் கலை அதாவது - ஐந்து திணைகளுக்கும் உரிய பாடல்களை எண் ணிட்டு வரிசைப் படுத்தியமைத்திருக்கும் முறை ஓர் அருங் கலைச் செயலாகும். அந்தக் கலையழகு வருமாறு; நானூறு பாடல்களில் நாற்பது பத்துப் பாடல்கள் (10x40=400) உள்ளன. ஒவ்வொரு பத்துப் பாடல்களிலும் ஒற்றைப் படையாக உள்ள ஒன்று, மூன்று, ஐந்து, ஏழு ஒன்பது என்னும் ஐந்துவித எண்கள் கொண்ட பாடல்கள் பாலைத்திணைக்கு உரியனவாம்; இரட்டைப் படையாக உள்ள மற்ற எண்களுள் இரண்டு, எட்டு என்னும் இரண்டுவித எண் கள் கொண்ட பாடல்கள் குறிஞ்சித் திணைக்கு உரியனவாம்; நான்கு என்னும் எண் கொண்ட பாடல் முல்லைத்திணைக்கு உரியதமாம், ஆறு என்னும் எண் கொண்டது மருதத்திணைக்கு உரியது; பத்து என்னும் எண்ணுடையது நெய்தல் திணையாம். எனவே, ஒவ்வொரு பத்துப் பாடல்களிலும் பாலைக்கு ஐந்து வீதமும், குறிஞ்சிக்கு இரண்டு வீதமும், முல்லைக்கும் மருதத் திற்கும் நெய்தலுக்கும் ஒவ்வொன்று வீதமும் இருக்கும் என அறியலாம்: ஆகவே, நானுாறு பாடல்களிலும், பாலைக்கு நாற்பது ஐந்துவீதம் (3x40 =200) இருநூறு பாடல்களும் குறிஞ்சிக்கு நாற்பது இரண்டு வீதம் (2x40=80) எண்பது பாடல்களும், முல்லைக்கு நாற்பது ஒன்று வீதம் (x40=40) நாற்பது பாடல்களும், மருதத்திற்கு நாற்பது ஒன்று வீதம் (1x40=40) நாற்பது பாடல்களும், நெய்தலுக்கு நாற்பது மூன்று வீதம் (1x40=40) பாடல்களும் இருக்கும். எடுத்துக்காட்டாகப் பார்ப்போமாயின், 11, 53, 105, 207 319 ஆகிய எண்கள் கொண்ட பாடல்கள் பாலைத் திணை யாகவும், 122, 378 ஆகிய எண்கள் கொண்ட பாடல்கள் குறிஞ் சித் திணையாகவும், 154ஆம் எண் கொண்ட பாடல் முல்லைத் திணையாகவும், 276 - ஆம் எண்ணுள்ள பாடல் மருத மாகவும், 390 ஆம் எண் உள்ளது நெய்தலாகவும் இருக்கக் காணலாம். இந்தத் தொகுப்பு முறையினை. அகநானூற்றுப் பாயிரப் பகுதியின் இறுதியிலுள்ள மூன்று பாடல்கள் மிகவும் தெளிவாக விளக்கியுள்ளன. அவை வருமாறு,