பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/272

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


248 தமிழ் நூல் தொகுப்புக் கலை இந்தத் தொகுப்புமுறையில் சில வசதிகள் உள்ளன. ஒரே திணையைப்பற்றிய பாடல்களைத் தொடர்ந்து படிப்பதால் ஏற்படக்கூடிய சலிப்புக்கு இதில் இடமில்லை. பாடலுக்குப் பாடல் மாற்றம் இருப்பதால் கவர்ச்சியூட்டி ஆர்வமுடன் படிக்கத் தூண்டும், ஆராச்சியாளர்கள் எண்ணைக் கொண்டு திணையையும், திணையைக் கொண்டு எண்ணையும் தீர் மானித்துச் செயலாற்ற இது வசதியானது. பாடல்களின் தலைப்பாகத் திணைப்பெயர்களும் தொடர்ந்து துறைகளும் தரப்பட்டுள்ளன. இவ்வாறு இதில் பல நன்மைகள் உண்டு. அகநானூற்று ஆசிரியர்கள்: அகநானூறு, குறைந்த அளவு பதின்மூன்று அடிகளும், மிகுந்த அளவு முப்பத்தோரடிகளும் கொண்ட நானுரறு பாக் களால் தொகுக்கப்பட்டது என்பதும், இதனைத் தொகுப்பித்த வர் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி என்பதும், தொகுத்த வர் உருத்திரசன்மர் என்பதும், இன்ன பிறவும் நாம் முன்னரே அறிந்த செய்திகளாம். ஆனால், அகநானூற்றுப் பாடல்களை இயற்றிய ஆசிரியர்களைப்பற்றி தாம் இதுவரை மூச்சுப் பேச்சுக் காட்டவில்லையே, அவர்கள் இன்றி அகநானூறு ஏது? அகநானூற்றின் இறுதியில் பாயிரப் பாடலை விளக்குகிற உரைநடைப் பகுதியில், 'நெடுந்தொகை நானூறு கருத் தினோடு முடிந்தன; இவை பாடின கவிகள் நூற்று நாற். பத்தைவர்”-என்னும் செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. நெடுந் தொகைப் பாடல்கள் நானுாறு என்றும், இந்த நானூற்றையும் ஒருவரோ அல்லது நானூறு புலவர்களோ பாடவில்லை-நூற்று நாற்பத்தைந்து புலவர்கள் பாடினர் என்றும் இது தெளிவாக அறிவிக்கிறது. சில புலவர்கள் பல பாடல்கள் பாடியுள்ளனர். இந்த நாற்று நாற்பத்தைவருள் மிக்க எண்ணிக்கையில் பாடல் கள் பாடியுள்ள புலவர்கள் பதின்மரைப் பாடல்களின் மொத்த எண்ணிக்கையுள் ஈண்டு வரிசைப்படுத்திக் காண்பாம்: