பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/289

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புறநானூறு 265 இனி, புறநானூற்றில் ஒவ்வொரு திணைக்கும் உரிய பாடல் எண்ணிக்கை முறையே வருமாறு: 1. வெட்சி ... 5 | 7. தும்பை ... 27 2. கரந்தை ... 12 ! 8. வாகை ... 80 3. வஞ்சி ... 11 ! 9. பாடாண் திணை ... 139 4. காஞ்சி ... 33 | 10. பொதுவியல் ... T3 5. உழிஞை ... ? 11. கைக்கிளை ... 3 6. நொச்சி ... 6 12. பெருந்திணை ... 5 புறநானூற்றில் இரண்டு பாடல்கள் முழுதும் கிடைக்க வில்ல்ை. எனவே, அவற்றிற்குரிய திணைகள் தெரியவில்லை. வேறு சில பாடல்களின் திணைகளும் அறிவிக்கப்படவில்லை: அந்த இடம் செல்லரித்து விட்டது போலும்! மேலே தரப் பட்டுள்ள பட்டியலில் உழிஞைத் திணைக்கு ஒரு பாடலும் இல்லாததை அறியலாம். ஒருவேளை, கிடைக்காத பாடல்கள் உழிஞைத் திணையைப் பற்றியனவாயும் இருக்கலாம். உழிஞைத் திணைக்கெனத் தனிப்பாடல்கள் இல்லாவிடினும், சிலவேறு திணைப்பாடல்களின் ஊடே உழிஞைத் திணையும் மறைமுகமாக ஊடுருவி இடம் பெற்றிருப்பதை நூலை ஊன்றிக் கற்பவர் உணர்வர். புறநானுாற்றில், பன்னிரு திணைகளுள், பாடாண் திணை நூற்று முப்பத்தொன்பது பாடல்களுக்குக் குறையாமல் பெற்று முதலிடத்தில் நிற்கிறது. எண்பது பாடல்களுக்குக் குறையாத வாகைத் திணை இரண்டாவது இடமும் எழுபத்து மூன்று பாடல்களுக்குக் குறையாத பொதுவியல் திணை மூன்றாவது இடமும் முறையே பெற்றுள்ளன. மற்றத் திணைகள் மற்றப் பாடல்களைக் குறைந்த அளவில் பங்கிட்டுக் கொண்டுள்ளன. - இந்த அமைப்பினை நோக்குங்காற் - மாடு பிடித்தல் நாடு பிடித்தல், அரண் முற்றுகை, வலிமைப் போர் ஆகிய புறத்திணையைக் காட்டிலும் ஒருதலைக்காமமும்பொருந்தாக் காமமும் ஆகிய அகப்புறத்திணையைக் காட்டிலும், பாடாண் திணை, வாகைத்திணை, பொதுவியல்திணை என்னும் மூன்று புறத்திணைகளே புறநானூற்றில் பெரும்பாலும் பேசப்