பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/353

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பதிற்றுப் பத்து 329 ஏற்றுக் கொண்டிருப்பர். கலித்தொகைப் பாடல்களைப் பாடிய புலவர்களுள் ஒருவரான நல்லந்துவனார் என்பவரே கலித் தொகையைத் தொகுத்தார் என்னும் செய்தி ஈண்டு ஒப்பு நோக்கற்பாலது. ஆனால், இப்படி முன்கூட்டித் திட்டமிட்டுப் பதின்மரிடம் சொல்லிப் பாடவைத்துத் தொகுக்கப்பட்டது என்னும் செய்தி ஒத்துக்கொள்ளக் கூடியதா? உண்மையானதா? இவ்வாறு சொல்லிப் பாடச் செய்திருந்தால், தொகுப் பாளர்க்குப் பெரிய வேலை யொன்றும் இருந்திராது. ஈண்டு, மற்றத் தொகை நூல்கள் தொகுக்கப்பட்டதிலி ருந்த தொல்லையையும் தொகுப்புக் கலை நுட்பத்தையும் ஆஹன்றி நோக்கவேண்டும். எண்ணிறந்து பரந்துபட்டுக் கிடந்த? பாடல்கள் பலவற்றிலிருந்து, எடுத்துக் கொண்ட பொருளுக்கு ஏற்பச் சிறந்துநிற்கும் சில பாடல்களைத் தேர்ந்தெடுத்து ஒரு நூலாகத் தொகுப்பதே தொகுப்புக் கலை யாகும் - அவ் வாறு தொகுக்கப்பட்டதே தொகை நூல் எனப்படும். அவ்வாறு தொகுத்த புலவரே, இந்நாலைத் தொகுத்தவர் இன்னார் என்று விதந்து குறிப்பிடுதற்கு உரிய சிறப்பினை யுடையவர் ஆவார். சொல்லி வைத்துச் செய்த நூறு பாடல்களைத் தொகுப்பது ஒரு தொகை யாகாது-அவ்வாறு தொகுத்தவர்' தொகுப்பாளர் என்னும் சிறப்புத் தகுதிக்கு உரியவராக முடி யாது. எனவே, பத்துக்கு மேற்பட்ட சேர மன்னர்கள் பலரைப் பற்றி, பத்துக்கு மேற்பட்ட புலவர்கள் பலர் பப்பத்து வீதத் துக்கு மேல் பாடிய எண்ணிறந்த பாடல்களிலிருந்துதொகுத்து உருவாக்கப்பட்டதே பதிற்றுப்பத்து என்னும் நூல் என்பது புலனாகலாம். சேரமன்னர் ஒருவர்மேல் புலவர் ஒருவரே பத்துக்குமேல் பல பாக்கள் பாடியிருப்பர். இவ்வாறு பலர்மேல் பலர் பாடிய பல பாக்களைக் கண்ட ஒருவர், சிறந்த பத்து மன்னர்களைப்பற்றிப் பத்துப் புலவர்கள் பாடியுள்ள பத்துப் பத்துப் பாடல்வீதம் நூறு பாடல்களை மட்டும் தேர்ந்தெடுத்து அழகுபெறப் பதிற்றுப் பத்து என்னும் பெயருடன் ஒரு நூலா கத் தொகுத்திருக்கலாம். இந்த அமைப்பைப் பார்த்த-பின்வந்த ஒருவர், இன்னார் மேல் இன்னார் பாடினார் பத்துப் பாட்டு.