பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

358 தமிழ் நூல் தொகுப்புக் கலை மேற்காட்டியுள்ள உரைப் பகுதிகளால், அம்மை என்பதன் இலக்கணமும் அதற்குப் பதினெண்கீழ்க் கணக்கு நூல்கள் பொருந்துமாறும் புலனாகும். உரையாசிரியர்கள் கீழ்க்கணக்கு நூல்கள் பதினெட்டையுமே பொதுவாகக் குறிப்பிட்டிருப்பதல் லாமல், திருக்குறள், கார் நாற்பது, களவழி நாற்பது, ஆசாரக் கோவை ஆகிய கீழ்க்கணக்கு நூல்கள் சிலவற்றைச் சிறப்பாக விதந்து குறிப்பிட்டிருப்பது ஈண்டு எண்ணத்தக்கது. பெயர்க் காரணம் கணக்கு என்பதற்கு நூல் என்பது பொருளாம். மக்கள் தொடக்கக் காலத்தில் மொழி பேசுதல் மட்டும் செய்தனர்; எழுதவில்லை; எழுதவும், தெரியாது. கொடுத்தல் வாங்குதல் ஆகிய கணக்குவிவரம் குறிப்பிடவே முதல்முதல் ஏதோ குறி யீடு செய்து வரிவடிவத்திற்கு அடிகோலினர். கணக்குக் குறித்து வைத்த சுவடி கணக்குச் சுவடி எனப்பட்டது. நாளடைவில் எது எழுதப்பட்ட சுவடிக்கும் கணக்கு என்னும் பெயர் ஏற் பட்டது; அஃதாவது, எழுதி வைக்கப்பட்ட குறிப்பு கணக்கு எனப்பட்டது. இப்படியாக, கருத்துக்கள் எழுதப்பட்ட நூல் களும் கணக்கு எனப்பட்டன. நூல் கற்பிக்கும் ஆசிரியர் கணக் காயர் எனப்பட்டார். கணக்கு நூலாக மாறிய வரலாறு இது. இந்த அடிப்படையுடன் மேற்கணக்கு. கீழ்க்கணக்குக்கு வருவோம். மிக்க அடிகள் கொண்ட நீண்ட பாக்களால் ஆன நூல்கள் மேற்கணக்கு எனவும், குறைந்த அடிகள் கொண்ட குறுகிய பாக்களால் ஆன நூல்கள் கீழ்க்கணக்கு எனவும் வழங் கப்ப்ட்டன. ஆனால், பன்னிரு பாட்டியலில் தவிர வேறு எந்த நூலிலும் யாராலும் மேற்கணக்கு என்னும் பெயர் வழங்கப் படவே யில்லை. அதற்கு மாறாகக் கீழ்க்கணக்கு என்னும் பெயர் பல நூல்களிலும் பலராலும் நிரம்ப வழங்கப்பட்டுள் ளது. இதைக் கொண்டு,-மேற்கணக்கு, என்னும் வழக்காறு அன்று இல்லை; கீழ்கணக்கு என ஒன்று இருப்பதால், அதற்கு நேர்எதிராக மேற்கணக்கு என ஒன்றைப் புதிதாகப் படைத் துக் கொண்டு, பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் போலவே பதினெண் மேற்கணக்கு நூல்களும் உள என எண்ணிக்கை