பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/400

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


376 தமிழ்நூல் தொகுப்புக் கலை நக்கீரரும், நக்கீரர் அடி நூல் என்னும் யாப்பிலக்கணம் எழுதிய நக்கீரரும் ஒருவரா, அல்லது வெவ்வேறானவரா? மற்றும், நாலடியாரை நக்கீரர் இயற்றியதாகக் கூறுபவர் கள். 'இந்த நக்கீரர், பத்துப் பாட்டுள் ஒன்றாகிய திருமுரு காற்றுப் படையை இயற்றிய நக்கீரர் அல்லர்; இவர் ஒரு சமண முனிவர்" என்று கூறுகின்றனர். நாலடியார் இயற்றிய நக்கீரர் ஒரு சமண முனிவர் ஆதலின், நாலடியாரைச் சமண முனிவர் இயற்றியதாகக் கூறி வந்தனர்; பின்னர்ச் சமண முனிவர்கள் இயற்றியதாகக் கூறத் தொடங்கிவிட்டனர். என்று இக்கொள்கையினர் கருதுகின்றனர். எது சரி? எது தவறு? ஒரே குழப்பமாயுள்ளது. இங்கே இன்னொரு கருத்தும் கூறுதற்கு இடமுண்டு. யாப்பருங்கலம்உறுப்பியலில் உள்ள, 'இரண்டாம் எழுத்தொன்றியைவதே எதுகை' என்னும் (4-ஆம்) நூற்பாவின் விருத்தியுரையிடையே (இன்னிசை வெண்பா) “ஊசி யறுகை யுறுமுத்தம் கோப்பனபோல் மாசி புகுபனிநீர் வந்துறைப்ப-மூசும் முலைக்கோடு புல்லுதற்கொன் றில்லாதான் காண்மோ விறக்கோடு கொண்டெறிக்கின் றேன்.' இந் நக்கீரர் வாக்கினுள் கடையிரன்டையும் மூன்றாம் எழுத்து ஒன்றி வந்தவாறு கண்டு கொள்க.” என்னும் உரைப்பகுதி உள்ளது. மேலே உள்ள பாட்டு "நக்கீரர் வாக்கு எனக் கூறப்பட்டுள்ளது. இந்த வெண்பா அகப்பொருள் பற்றியதாகும். இவ்வாறு நக்கீரர் நானுாறு வெண்பாக்கள் பாடி, நாலடி நானூறு, என்னும் பெயரில் ஒரு நூல் படைத்திருக்கலாம். இந்த நக்கீரர் நாலடி நானுறு என்னும் நூலை யாப்பருங்கல விருத்தியுரை சுட்டி யிருக்கலாம் அங்ங்னமாயின், இந்த நாலடி நானுாறு வேறு என்பதும் உய்த்து ணரப்படலாம். நடுநிலையுடன் பல கோணங்களிலும் நின்று ஆராய்ந்து நோக்குங்கால், நாலடியார் பலர் பாடிய பாடல்களின் தொகுப்பு நூல் என்றே தோன்றுகிறது.