பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. பழமொழி பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் நாலடியார்: ஒன்று மட்டுமே உதிரிப்பாடல்களின் தொகுப்பு நூலாகும்; மற்றப் பதினேழும் ஒவ்வொருவரால் இயற்றப்பெற்ற தனித்தனி முழு நூல்களாகும். நாலடியாரும் இப்போது நக்கீரர் தலையில் கட்டப்பட்டு வருகிறது. இந் நிலையில், பதினெண் கீழ்க்கணக் கில் தொகை நூல்களாகக் குறிப்பிடத்தக்கவை வேறு இல்லை யெனினும், ஏதேனும் ஒவ்வொரு கோணத்தில் சிலநூல்களைத் தொகைநூல்களாகக் குறிப்பிடலாம். இந்த அடிப்படையில், பழமொழி என்னும் நூலை ஒரு கோணத்தில் தொகைநூலாகக் கூறலாம். அஃதாவது, பல உதிரிப் பாடல்களின் தொகுப்பு அன்று; பல பழமொழிகளின் தொகுப்பு இந்நூல். இந்நூலில் நானூறு பாடல்கள் உள்ளனவா தலின் இது பழமொழி நானுாறு’ எனவும் வழங்கப்படும். ஒரு பாடலுக்கு ஒரு பழமொழி வீதம், நானுாறு பாடல்களிலும் நானு று பழமொழிகள் அமைத்து விளக்கப்பட்டுள்ளன. எனவே, இந்தக் கோணத்தில், நானூறு பழமொழிகளின் தொகுப்பாகிய இந்நூலை ஒரு தொகை நூல் எனலாம். இலத் தீன், பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் உள்ள பழ மொழிகளின் தொகுப்பு நூல்கள், தொகைநூல்களின் வரிசை யில் இடம் பெற்றிருப்பதுபற்றி முன்போரிடத்தில் விளக்கப் பட்டிருப்பது ஈண்டு ஒப்புநோக்கற்பாலது. நானூறு வெண்பாக்கள் கொண்ட இந்நூலின் ஆசிரியர் முன்றுறை ய்ரையனார் என்பவர். சங்க காலத்திலேயே நானூறு பழமொழிகளை நானுறு பாடல்களால் விளக்கியிருப் பதைக் கொண்டு, பண்டைக் காலத்தில் தமிழ் மொழியில் இருந்த பழ்மொழிச் செல்வவளத்தின் செழிப்பினை அறிய Gl) T LI):