பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/403

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஆசாரக் கோவை 379 யென்னும் சொல்லால் குறிக்கும் மரபுண்டு. எட்டுத் தொகை நூல்கள் எண் கோவை' என வழங்கப்பட்டிருப்பதும், அக நானூற்றில் நித்திலக்கோவை’ என ஒரு பிரிவு இருப்பதும், பிற்காலத் தொகை நூல்கள் சில கோவை' என்னும் பெயரால் வழங்கப்படுவதும் ஈண்டு நினைவுகூரத் தக்கன. ஆனால், அக் கோவை நூல்களைப்போல ஆசாரக் கோவை பலர் பாடிய பாடல்களின் கோவையாகிய தொகுப்பன்று. நல்லொழுக்கங் களைத் (ஆசாரங்களைத்) தொகுத்துக் கூறுவதால் இஃது ஆசாரக் கோவை எனப்பட்டது. எனவே, இந்த நூலைப் பலர் பாடிய ப்ல உதிரிப் பாடல்களின் தொகுப்பாகக் கொள்ளாமல், பல நல்லொழுக்கங்களின் தொகுப்பு நூலாகக் கொள்ள வேண்டும், பிற நூல்கள் "தொகைநிலைச் செய்யுள் தோன்றக் கூறின் ஒருவர் உரைத்தவும் பல்லோர் பகர்ந்தவும் பொருளிடம் காலம் தொழிலென நான்கினும் பாட்டினும் அளவினும் கூட்டிய வாகும்.” என்னும் தண்டியலங்காரப் பொதுவணியியல் (5-ஆம்) நூற் பாவின் கீழ்ச் சுப்பிரமணிய தேசிகர் எழுதிய உரையிடையே உளள, - 'அவற்றுள், ஒருவரால் உரைக்கப்பட்டது திருவள்ளுவப் பயன் (திருக்குறள்); பலரால் உரைக்கப்பட்டது. நெடுந்தொகை: இஃது எல்லாத் தொகைக்கும் பொதுவிலக்கணம். பொருளால் தொகுத்தது புறநானூறு இடத்தால் தொகுத்தது களவழி நாற்பது. காலத்தால் தொகுத்தது கார்நாற்பது. தொழிலால் தொகுத்தது ஐந்திணை. பாட்டால் தொகுத்தது கலித் தொகை. அளவால் தொகுத்தது குறுந்தொகை. இவை சிறப் பிலக்கணம்'- r என்னும் உரைப்பகுதியைக் காணுங்கால், திறக்குறள், களவழி நாற்பது, கார் நாற்பது, நான்கு ஐந்திணை நூல்கள் முதலிய கீழ்க்கணக்கு நூல்களையும் ஒவ்வொரு கோணத்தில் தொகை நூலாகச் சொல்லத் தோன்றும். இவ்வாறு பார்த் தால், எல்லாமே தொகை நூல்களாகி, எல்லையற்றுப் போகு மாதலின் இம் மட்டில் விடுப்போம்.