பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/408

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


384 தமிழ்நூல் தொகுப்புக் கலை லுக்கும் ஏற்பவே, இவர் இப்பாடலில் தலைநோய் மருந்தைப் பற்றிக்கூறியுள்ளார். எனவே இப்பாடல் இவர் இயற்றியதே யாகும் என்பது தெளிவு. மேலும், சங்கப்புலவராகிய சாத்த னார்க்குத் திருக்குறளைக் கேட்டதும் தலைநோய் தீர்ந்து விட்டதாக இப் பாடல் அறிவிக்கிறது. எனவே, சங்க காலத்தி லேயே திருக்குறள் இயற்றப்பட்ட உண்மை தெற்றென விளங் கும்.சாத்தனாரது பாடலும் திருவள்ளுவ மாலையில் உள்ளது. எனவே,இன்னபிற அகச் சான்றுகளால், திருவள்ளுவ மாலைப் பாடல்கள் சங்க ாலத்திலேயே - சங்கப் புலவர்களாலேயே இயற்றப் பெற்றன எனத் தெளிவாக நம்பலாம். தொகுப்பாசிரியர்: திருவள்ளுவரின் பெருமையைக்கூறும் உதிரிப்பாடல்களைத் 'திருவள்ளுவ மாலை என்னும் பெயரில் தொகுத்தவர் இன் னார் எனத் தெரியவில்லை. இந்தத் தொகுப்பு முயற்சி குறிப் பிட்ட ஒருவருடையதாக இல்லாமல், மொத்தத்தில் சங்கத் தாருடையதாகவும் இருந்திருக்கலாம், திருக்குறளின் பெரு மையை ஏற்றுக்கொண்ட சங்கப் புலவர்கள் பலர் அதனைப் பாராட்டிப் பாடல் இயற்றினர். அவற்றைச் சங்கத்தார் தொகுத்துத் திருவள்ளுவ மாலை என்னும் பெயரில் திருக்குறளின் சிறப்புப் பாயிரமாக ஆக்கியிருக்கலாம். ஒரு வேளை, இந்த முயற்சியை ஒருவரே மேற்கொண்டிருப்பினும், அதற்குச் சங்கப் புலவர்களின் ஒத்துழைப்பு இருந்திருக்கக் கூடும். மற்றும், திருவள்ளுவர் காலத்திலேயே இந்தப் பாடல் கள் சங்கப் புலவர்களால் இயற்றப்பட்டிருப்பினும், பிற்கால்த் திலேதான் இவை திருவள்ளுவமாலை என்னும் பெயரில் ஒரு நூலாகத் தொகுக்கப் பெற்றன - என்று கூறுவாரும் உளர். எது எப்படி யிருந்த போதிலும், பலர் பாடிய பாடல்களின் தொகுப்பே திருவள்ளுவ மாலை என்பதில் ஐயமில்லை. மாலையின் மாண்பு திருவள்ளுவ மாலைப் பாடல்களுள் இறுதியிலுள்ள இடைக் கா-ர் பாடலும் ஒளவையார் பாடலும் குறள் வெண்பாக்க ளால் ஆனவை; மற்றவை நேரிசை வெண்பாக்களால் ஆனவை. இடைக்காடரும் ஒளவையாரும் திருக்குறளின் கருத்துச் செறி