பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. இடைக்காலம் மூவர் தமிழ் 'மூவர் தமிழ் என்பது சில நூல்களில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. ஒளவையார் தமது நல்வழி' என்னும் நூலின் நாற்பதாம் பாடலில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்: "தேவர் குறளும் திருநான் மறைமுடிவும் மூவர் தமிழும் முனிமொழியும்-கோவை திருவா சகமும் திருமூலர் சொல்லும் ஒருவா சகம் என் றுணர்” (நல்வழி - 40) மூவர் தமிழ் என்பதில் மூவர் என்பவர் யார் - யார்? மூவர் தமிழ் என்பது எது? இதற்கு விடை, உமாபதி சிவா சாரியரால் (உமாபதி சிவத்தால்) இயற்றப்பட்டதாகக் கூறப் படும் திருமுறை கண்ட புராணம்’ என்னும் நூலில் உள்ளது. இந்த நூலில் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் என்னும் மூவர் தொடர்பான செய்திகளும், இவர்கள் பாடிய தமிழ்ப் பாடல்கள் தொடர்பான செய்திகளும் பேசப் பட்டுள்ளன. இவர்கள் அருளிய தமிழ்ப் பாடல்கள் 'மூவர் தமிழ்’ (9), மூவர் செந்தமிழ்கள் (10), மூவர் பாடல்,' (13,22) எனக் குறிப்பிடப்பட்டுள்ளன. இம்மூவரும் 'தமிழ் மூவர் (19) என்று ஒரு பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளனர். இதனால், மூவர் யார் - யார்? என்பதும், மூவர் தமிழ் என்பது இம் மூவரும் பாடிய தமிழ்ப் பாடல்களைக் குறிக்கும் என்பதும் பெறப்படும். இனி, இந்த மூவர் தமிழ் பற்றிய வரலாற்றை, திருமுறை கண்ட புராணத்தில் உள்ள்வாறு காண்பாம்: இராச ராச சோழனிடம், அவ்வப்போது சிலர் வந்து, இந்த மூவரால் அருளப்பட்ட சிற்சில பாடல்களைப் பாடிக் காட்டினர். பாடலைக் கேட்டுச் சுவைத்து மகிழ்ச்சி வெள்ளத் தில் ஆழ்ந்த மன்னன், இம்மூவரின் பாடல்கள் அனைத்தையும் அறியவேண்டும்; அவை எங்கு உள்ளன? எனத் தேடச் செய்