பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/422

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


400 தமிழ் நூல் தொகுப்புக் கலை தான். எங்கும் கிடைக்கவில்லை. பின்னர், நம்பியாண்டார் நம்பி யிருந்த திருநாரையூருக்கு வந்து, மூவர் பாடல்களைத் தேடிக் கண்டுபிடித்துத் தரல் வேண்டும் என நம்பியிடம் வேண்டுகோள் விடுத்தான். சிதம்பரத்து நடராசர் கோயிலில் ஓர் அறைக்குள் காப்பிட்டுக் கிடக்கின்றன என்று.அவர் தெரிவித் தாா. இராசராசன் சிதம்பரம் சென்று, கை இலச்சினை (முத்திரை) இட்டு மேற்குச் சுற்றில் உள்ள அறையினைத் திறக்கும்படி கோயில் பூசனை புரியும் அந்தணர்களை வேண்டினான். அந்தணர்கள், 'தமிழ் வைத்த மூவர் வந்தால் அறை திறக்கும்’ (19) என்றனர். அதாவது, சம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர் என்னும் மூவரும் வந்தாலேயே அறை திறக்கப்படும் என்று கூறிவிட்டனர். வீட்டுலகில் (மோட்சத்தில்) இருக்கும் அம்மூவரையும் மன்னன் எந்தப் போக்கு வரவு ஊர்தியின் வாயிலாக எவ்வாறு அழைத்துவர இயலும்? பார்த்தான் மன்னன். உடனே, கோயிலில் திருவிழா நடத்தச் சொன்னான். மூவர் சிலைகளை யும் அணி செய்து ஊர்வலமாக அந்த அறைக்கு எதிரில் கொண்டுவரச் செய்தான்; இதோ மூவரும் வந்து விட்டனர் கதவைத் திறக்கலாம். என்றான். - அந்த மூன்று சிலைகளையும் மூவர் இல்லை எனக்கூறின், எந்தக் கோயிலில் உள்ள எந்தச் சிலைக்கும் வேலை கிடையா தன்றோ? எனவே, கை காப்பு நீக்கி அறை திறக்கப்பட்டது. செல்லுப் புற்று மண்ணால் சுவடிகள் மூடப்பட்டிருந்தன. புற்று மண்ணைத் தட்டிக் கொட்டிச் சீர்செய்து, நல்ல உருப் படிகளாகக் கிடைத்தவரையும் எடுத்துப் போற்றினர். மன்னன் வேண்டுகோளின்படி, நம்பியாண்டார் நம்பி, மூவர் பாடல் களையும் ஏழு திருமுறைகளாக வகுத்துத் தொகுத்தார். பன்னிரு திருமுறைகள்: சைவப் பெருநூல்கள் பன்னிரண்டு திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுப் போற்றப்படுகின்றன. அவற்றுள் முதல் ஏழு திருமுறைகள் மூவர் பாடல்களேயாகும். சம்பந்தரின்