பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/430

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

408 தமிழ் நூல் தொகுப்புக் கலை சம்பந்தர், தெரிந்த வரையும், 214 திருப்பதிகட்குச் சென்று வழிபட்டதாகத் தோன்றுகிறது. சீர்காழி பற்றியும் திரு வீழி மிழலை பற்றியும் மிகுதியான பதிகங்கள் பாடியிருப்பதால், 'காழி பாதி - வீழி பாதி என்று சொல்வதுண்டு. சம்பந்தரின் பதிகங்களில் பதினொரு பாடல்கள் இருக்கும். சில பதிகங்களில் பன்னிரண்டும் இருக்கும். இறுதிப்பாடல் திருக்கடைக் காப்பு எனப்படும். ஒவ்வொரு பதிகத்திலும், எட் ட்ாம் பாடலில் இராவணன் கயிலை மலையை எடுத்துச் சிவ னால் நசுக்கப்பட்டதும், ஒன்பதாம் பாடலில் திருமாலும் நான்முகனும் சிவனை வழிபடுவதும், பத்தாம் பாடலில் சமண -புத்த மதங்களைத் தாக்குதலும், பதினோராம் பாடலில் சம்பந்தர் தம்பெயரைப் புகழுடன் கூறுவதோடு பாடலைப் படிப்பதன் பயனையும் கூறுதலும் அமைந்திருக்கும். பதினோ ராம் பாடல்களில் தம்மைப்பற்றிக் கூறுவதால், சம்பந்தன் தன்னைப்பாடுவான்' என்னும் மொழி எழுந்துள்ளது. இதனைத் தற்புகழ்ச்சி என்று கொள்ளாமல், தன்வரலாறு (Autobiography) கூறுதல் என்று கொள்ளலாம். - சம்பந்தர் தம்மைத் 'தமிழ் விரகர்’ என்று கூறிக்கொள்வ தால் அவரது தமிழ்ப் பற்று விளங்கும். ஆதி சங்கரர் சம்பந் தரைத் திராவிட சிசு' என்று கூறியிருப்பது ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கது. எனவே, சம்பந்தரை வைதிகப் பார்ப்பனர் என்று கொள்ளாமல், பண்டைத் தமிழ்ப் பார்ப்பன மரபைச் சார்ந்தவர் என்று கூற வாய்ப்பு உண்டு என்னும் கருத்து எண்ணத் தக்கது. - சம்பந்தர், தந்தையும் மைந்தனும் போன்ற (சற்புத்திர மார்க்கம்) முறையில் இறைவனோடு ஈடுபாடு கொண்டவர் என்று சொல்லப்படுகின்றார். அதற்கேற்ப அவருடைய பாடல் கள் சில அமைந்துள்ளன. - - - சம்பந்தர் தேவாரத்தில், யமகம், மாலை மாற்று முதலிய சுவைப்பாடல் வகை பல உள்ளன. அவற்றை விரிப்பின் பெரு கும். ஒன்றே ஒன்று மட்டும் காண்போம்: பிரமபுரம் பற்றிய 127 ஆம் பதிகத்தில் பன்னிரண்டு பாடல் கள் உள்ளன. ஒவ்வொரு பாடலிலும், முதல் அடியே, @Tন্ম