பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/441

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இடைக்காலம் 419 மும் (பதிகங்களும்) மூன்றாவதாகச் சுந்தரர் பதிகமும் அமைத்துத் தொகுக்கப்பட்டிருக்கும். - இப்பதிப்பில், முதலில் சோழநாட்டுப் பதிகள் இடம் பெற்றுள்ளன; அவற்றுள்ளும், காவிரியாற்றிற்கு வடகரையில் உள்ள பதிகள் முதலிலும் தென்கரைப் பதிகள் பின்னரும் இடம்பெற்றுள்ளன. அடுத்தடுத்து, ஈழ நாட்டுப் பதிகள், பாண்டிய நாட்டுப் பதிகள், மலை நாட்டுப் பதிகள், கொங்கு நாட்டுப் பதிகள், நடு நாட்டுப் பதிகள், தொண்டை நாட்டுப் பதிகள், துளுவ நாட்டுப் பதிகள், வட நாட்டுப் பதிகள், ஆகியவை முறையே இடம்பெற்றுள்ளன. இவற்றிற்குப் பின்னர், ஊர்ப் பெயர் (பதிப்பெயர்) குறிப்பிடப்பட்ாத பொதுப் பதிகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பதியைப் பற்றியும் ஆராய்ச்சி செய்பவர்க்கு இப்பதிப்பு மிகவும் உதவும். மூவர் பதிகங்களையும் ஒருசேரத் தொடர்ந்து தந்திருக்கும் இந்தப் பதிப்பு மிகவும் பாரட்டத் தக்கதாகும். - வெளியீடு: குமர குருபரன் சங்கம், திருவைகுண்டம், பில வங்க, மார் கழித் திருவாதிரை-குமர குருபரன் அச்சகம், திருவைகுண்டம்-1968. தேவாரத் திரட்டுகள் மூவர் தேவாரப் பாடல்களிலிருந்து சிலவற்றை எடுத்துத் தொகுத்து, தேவாரத் திரட்டு' என்னும் பெயர் தரப்பட்ட தொகுப்புகள் மூன்று உள்ளன. அவை: அகத்தியர் தேவாரத் திரட்டு, தேவார அருள் முறைத் திரட்டு, அற்புதத் தேவாரத் திரட்டு என்பனவாம். இனி ஒவ்வொன்றாகக் காண்ப்ாம்: 1. அகத்தியர் தேவாரத் திரட்டு' இராச ராச சோழனின் வேண்டுகோளின்படி நம்பியாண் டார் தொகுத்த தேவாரத் திருமுறைகள் ஏழும் அடங்கில் முறை எனப்படும். அவை அனைத்தையும் நாள்தோறும், கற்பது அரிது. எனவே, அவற்றிலிருந்து சிறந்த சில பாக்களை