பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/515

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பிற்காலம் 493 கோவை, திருவேகம்பமுடையார் திருவந்தாதி, திருவொற்றி யூர் ஒருபா ஒருபஃது, திருப்பாடல் திரட்டுகள் - முதலாவது. கோயில் திருவகவல் - இரண்டாவது கோயில் திருவகவல் - மூன்றாவது கோயில் திருவகவல் - கச்சித் திருவகவல், திரு வேகம்ப மாலை, திருத்தில்லை திருப்பாடல் திரட்டுகள், பட்டினத்தார் அருட்புலம்பல் - ஆகிய நூல்களுடன், பத்திர கிரியார் மெய்ஞ்ஞானப் புலம்பலும் இதில் உள்ளது. பட்டினத்துப் பிள்ளையார் திருப்பாடல் திரட்டு இதில் பத்திரகிரியார் மெய்ஞ்ஞானப் புலம்பலும் உள்ளது வெளியீடு: கே.பி. சிங்காரவேலு முதலியார் அண்டு சன்ஸ், சென்னை அமெரிக்கன் டைமென்ட் பிரஸ், 1917. பட்டினத்தார் திருப்பாடல் திரட்டும் அருட் புலம்பலும் பத்திரகிரியார் மெய்ஞ்ஞானப் புலம்பலும் பார்வை: அ.மகாதேவயோகி. 'மூன்றாம் பதிப்பு. பி. இரத் தின நாயகர் அண்டு சன்ஸ் வெளியீடு. திருமகள் விலாச அச்சி யந்திர சாலை, சென்னை. 1927. இந்தத் திரட்டுக்குத் தத்து வார்த்த விளக்க உரையும், உண்டு. பட்டினத்துப் பிள்ளையார் திருப்பாடல் திரட்டு தொ - நல்லூர்ப் பொன்னம்பலம் பிள்ளை. வித்தியானு பாலன அச்சியந்திர சாலை, சென்னை. பத்தாம் பதிப்பு. ஆண்டு தெரியவில்லை. நூல்கள்: ஆனந்த அகவல்கள், ஏகம்ப மாலை திருத்தில்லை, திருக்காளத்தி, பொது, வெண்பா ஆகியன. பட்டினத்தார் இல்லறம் - துறவறம் இரண்டையும் வாழ்ந்து கண்டவர். பழுத்த பட்டறிவினால் எழுந்தவை அவரு டைய பாடல்கள். 2. தாயுமானவர் பாடல்கள் 18 ஆம் நூற்றாண்டில் வேதாரண்யத்தில் பிறந்து, திரு சிராப்பள்ளி நாயக மன்னனுக்கு அமைச்சராயிருந்து, திருமண மும் செய்து கொண்டபின் துறவியாக மாறிய தாயுமானவரின் (தாயுமானாரின்) பாடல்களைக் காணலாம்.