பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/514

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


492 தமிழ்நூல் தொகுப்புக் கலை யான பத்து ஆண்டுகளும் வருமாறு:- 1873, 1874, 1876, 1877, 1818, 1879, 1881, 1882, 1885, 1899-என்பனவாம். பட்டினத்துப் பிள்ளையார் பாடல் இந்தப் பெயரில் நான்கு பதிப்புகள் வெளிவந்துள்ளன. வெளியான ஆண்டுகள்: 1876, 1877, 1879, 1899. பட்டினத்துப் பிள்ளையார் திருப்பாடல் திரட்டு இந்தப் பெயரில் பலரால் 15 பதிப்புகள் வெளியிடப் பெற் றுள்ளன. வெளியான 15 ஆண்டுகள் வருமாறு: 1873, 1874, 1878, 1880, 1886, 1886,1887, 1888, 1888, 1888' 1888, 1888, 1889, 1889, 1897 என்பன. 1888 ஆம் ஆண்டில்’ ஐந்து பதிப்புகள் வெளிவந்துள்ளமை இந்நூலின் சிறப்பை அறிவிக்கிறது. இத்தனைப் பதிப்புகளால் பட்டினத்தாரின் பெருஞ் சிறப்பு புலனாகும். பட்டினத்துப் பிள்ளையார் பிரபந்தத்திரட்டு கட்டளையிட்டவர்: சிவஞான பாலைய சுவாமிகள். வெளி யிட்டவர்: வ. அண்ணாமலை பிள்ளை. அச்சு: வர்த்தமான தரங்கிணி சாகை அச்சுக்கூடம். காலம்: விபவ-சித்திரை. இது பல சிறு நூல்களின் திரட்டு. உள்ளுறை: கோயில் நான்மணி மாலை, திரு மும்மணிக் கோவை, திருவொற்றியூர்க் குறுந்தொகை, திருவேகம்ப முடையார் திருவந்தாதி, திருவேகம்ப மாலை, பொது, அருட் புலம்பல், உடற் கூற்று வண்ணம் - முதலிய சிற்றிலக்கியங்களின் திரட்டு இது. பட்டினத்தடிகள் பிரபந்தத் திரட்டு இது சிற்றிலக்கியங்கள் பலவற்றின் தொகுப்பு.ஆ.சிங்கார வேலு முதலியார் விரிவுரை எழுதியுள்ளார். வெளியீடு: B. இரத்தின நாயகர் & சன்ஸ், சென்னை. அச்சு: திருமகள் விலாச அச்சியந்திர சாலை, பதிப்பாண்டு 1934. விலை.ரூ.4-00. இதில் அடங்கியுள்ள நூல்கள்: கோயில் நான்மணிமாலை, திருக்கழுமல மும்மணிக்கோவை, திருவிடை மருதூர் மும்மணிக்