பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/513

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பிற்காலம் 49] ஏழு ஊர்ச் சிவன் மேல் பாடப்பெற்ற மூவர் தேவாரங்கள் இந்த வெளியீட்டில் தொகுத்துத் தரப்பட்டுள்ள ஏழு ஊர்கள் வருமாறு:- திருவாரூர், திருக்காறாயில், திருக்கோளிலி, திருநள் ளாறு, திருநாகைக் காரோணம், திருவாய்மூர், திருமறைக் காடு - என்பன. திருவண்ணாமலைத் திருப்பனுவல்கள் தொ - வெ - காசிமடம், திருப்பனந்தாள். பதிப்பாசிரியர்தி.பட்டுச்சாமி ஒதுவார். கீதா பிரஸ், திருச்சிராப்பள்ளி. விளம்பி, கார்த்திகை. 1958. உ-திருவண்ணாமலை மீது பாடப் பெற்ற தேவாரங்கள், மாணிக்க வாசகரின் திருவெம்பாவை, திருவண்ணாமலைத் திரு அம்மானை, அருணகிரிநாதரின் திருப்புகழ்-முதலியன. மாணிக்க வாசகரின் திருவெம்பாவை இருபது பாடல்கட்கும், ஜி.யு.போப் செய்துள்ள ஆங்கில மொழி பெயர்ப்பும் உடன் கொடுக்கப்பட்டுள்ளது இத்தொகுப் பின் ஒரு சிறப்பாகும். இருபெருந்துறவியரின் பாடல் திரட்டுகள் 1. பட்டினத்தார் பாடல்கள் கி.பி. பத்தாம் நூற்றாண்டில் காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்த திருவெண்காடர் என்னும் பட்டினத்தார் பெரிய செல் வராக இருந்து துறவறம் பூண்டு திருவொற்றியூரில் இயற்கை எய்தியவர். பட்டினத்துப் பிள்ளையார் எனவும் இவர் பெயர் வழங்கப்படுகின்றார். இவர் பாடல்கள் எண்ணங்களைக் கிளறி விடும் நையாண்டித் தனமும் உடையவை. இனி வரும்ாறு: பட்டினத்துப் பிள்ளையார் திருப்பாடல்கள் முதல்பதிப்பு: விக்கிரம - கார்த்திகை. இரண்டாம் பதிப்பு: சர்வ சித்து-தைத் திங்கள், வெளியீடு: வெ.பெரி.பழ.மு.காசி விசுவநாதன் செட்டியார். கபீர் அச்சகம், சென்னை.1.கிடைக்கு மிடம்: சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம். இத்தொகுப்பில் பல்வகைப் பாடல்கள் உள்ளன. - பட்டினத்தார் திருப்பாடல் திரட்டு பத்துப் பதிப்புக்கள் இப்பெயரில் வந்துள்ளன. வெளி