பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/581

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இருபதாம் நூற்றாண்டு * 559 நூதன தமிழ்ப் பாடல்கள் - ஆ - எஸ். ஆர். குப்புசாமி, B.A., M. MUS, கோவை. இப் பாடல்கள் சுர சாகித்தியத்துடன் உள்ளன. இது பற்றி வேறொன்றும் தெரியவில்லை. அன்னையின் திருவடி மலர்கள் ஆ- சுந்தரம். வெ-யோகா பப்ளிஷிங் ஹவுஸ், பெங்களுர், ஓரியன்ட் பவர் பிரஸ், பெங்களுர், 1947. தேவி மீது பல தலைப்பில் பல இசைப் பாடல்கள், கீர்த்தன மாலை - . - ஆ--பாபநாசம் சிவன். வெ-கலா rேத்திரக் காரியா லயம்-1945. இதில் 100(நூறு) கிர்த்தனப் பாடல்கள் உள்ளன வேதாந்தக் கீர்த்தனங்கள் ஆ--ஏ. எஸ். இலட்சுமி அம்மாள். வெ-ஜெயா & கம் பெனி, திருவல்லிக் கேணி, சென்னை - 1938. வேதாந்தக் கருத்துகள் நிறைந்த பல கீர்த்தனங்கள் இதில் உள்ளன. பாரதியார் பாடல்கள் தேசீய மாகவி சி.சுப்பிரமணிய பாரதியாரை அறியாத தமிழர்கள் இருக்க முடியாது. அவரைப் பற்றிய அறிமுக உரை எதுவும் இங்கே தேவையில்லை. அவருடைய பாடல்கள் பலரால் பல ஆண்டுகளில் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளன. முழுமையும் உள்ள பதிப்புகள் சில இருக்கும். சிற்சில அல்லது பற்பல பகுதிகள் மட்டும் இருக்கும் பதிப்புகளும் உண்டு. இனி அவற்றை வெளியான ஆண்டு வாரியாகக் காண்பாம்: பாரதி நூல்கள் - வெளியீடு: பாரதி பிரசுராலயம், சென்னை - 5. அச்சு: இந்தி பிரசார அச்சுக் கூடம், சென்னை - 5.ஐந்தாம் பதிப்பு - 1941. உள்ளுறை: தேசீய கீதங்கள், தோத்திரப் பாடல்கள், விநாயகர் நான்மணி மாலை, கண்ணன் பாட்டு, புதிய ஆத்தி