பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/59

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


34 தமிழ் நூல் தொகுப்புக் கலை உலகமொழிகள் சிலவற்றிலுள்ள தொகை நூல்களைப்பற்றி யும் அறிந்து கொள்வோமாயின், அம்மொழிகளோடு - அம் மொழிகளிலுள்ள தொகை நூல்களோடு, தமிழ் மொழியை தமிழ் மொழியிலுள்ள தொகைநூல்களை ஒத்திட்டு நேர்க்கிச் சு வைக்க முடியும்.அவ்வாறு ஒத்திட்டு நோக்கினால் தான் தமிழ் மொழியில் நூல்கள் தொகுக்கப்பட்டுள்ள முறை சரி யானதுதான் என்ற உண்மை புலனாகும்; அதனோடு, தமிழ் நூல் தொகுப்புக் கலைக்கு உள்ள இமயமலையனைய உயர்வும், 'பசிபிக் மா கடலனைய பரப்பும் ஆழமும் நன்கு புலப்படும். எனவே, தமிழ் மொழியிலுள்ள தொகை நூல்களின்வரலாற் றினை அறிவதற்கு முன்னர், கிரீக், இலத்தீன், பிரெஞ்சு ஆங்கிலம், சம்சுகிருதம், எபிரேயம், சீனம் முதலிய சிலமொழி களிலுள்ள தொகை நூல்களைப் பற்றிய வரலாறுகளை அடுத்த பகுதியில் காண்போம். موسمسمصممسمصمصعبد ضم مسة