பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/609

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இருபதாம் நூற்றாண்டு 587 - 17.ஜீவன் பிரஸ், சென்னை - 5. பல பொருள்கள் பற்றிய பல கவிதைகளின் தொகுப்பு. கண்ணதாசன் கவிதைகள் மூன்றாம் தொகுதி. வானதி பதிப்பகம், சென்னை. ஜீவன் அச்சகம், சென்னை. 1968, உள்ளுறை: வாழ்த்தும் வரவேற் பும், ரோஜாவின் ராஜா, கவியரங்கம், அரசியல், சீன எதிர்ப் புக் கவிதைகள், தத்துவம், பல் சுவை-7 பெரிய தலைப்புகள் உள்ளன. வாழ்க்கை என்பது முதல் மங்கலம் பேசுக வரை 85 உள் தலைப்புகளில் பாடல்கள் பல உள்ளன. திரை இசைப் UTLನಿಹನೆ ஆசிரியர் - கவிஞர் கண்ணதாசன். வானதி பதிப்பகம். பிப்ரவரி 1970. ஜீவன் பிரஸ், சென்னை - 5. கண்ணதாசன் முகவுரை எழுதியுள்ளார். 95 திரைப்படங்களில் பாடப்பெற்ற 501 பாடல்களின் தொகுப்பு இது. - உள்ளுன்ற: வணக்கம் (46), காதல் (138), குழலும் யாழும் (122), இயற்கை (14), தாலாட்டு (15), தத்துவம் (72),நகைச் சுவை (23), பல வகை (71)-ஆகியவை. இறுதியில் பாடல்களின் திரைப்பட வரிசைகள் தரப்பட்டுள்ளன. இதயப் பூங்கா ஆ- தமிழ் நம்பி. விற்பனை உரிமை - பாரி நிலையம், சென்னை. காக்ஸ்டன் அச்சுக்கூடம், சென்னை. 1967. உ - மொழி, இயற்கை, காதல், தாலாட்டு, தத்துவம், பல் சுவை-இவை பெரிய த்லைப்புகள். தமிழ் வணக்கம் முதல் 'பிறந்தேன் வரை 38 உள் தலைப்புகள் உள்ளன. இராகவன் திருக்குறள் மாலை ஆ-வித்துவான் சீரானி நந்தகோபாலன், வந்தவாசி. குகன் அச்சுச் கூடம், ஆரணி, உ-4 அடிப்பாடலில் முன் இரண்டடியில் இராம சரிதை வைத்துப்பின் இரண்டடியில் ஒரு திருக்குறளை அமைத்துப் பாடியது. இவ்வாறு நூறு வெண்பாக்கள் கொண்ட தொகுப்பு இது.