பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/651

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நான்கு காலம் 629 அகாதெமி, புது டில்லி. விற்பனை உரிமை: பழநியப்பா பிரதர்ஸ், சென்னை. அச்சு: ஏஷியன் பிரிண்டர்ஸ், சென்னை. முதல் பதிப்பு 1960. - இதில் தொகுக்கப்பட்டுள்ள நூல்கள்-தலைப்புகள் - பாடல் கள் பற்றி 16 பக்கம் கொண்ட விரிவான முன்னுரை சேதுப் பிள்ளையால் எழுதப்பட்டுள்ளது. முற்காலப்-பிற்காலப் புலவர் களான 122 புலவர்களின் பாடல் தொகுப்பு இது. நூலின் இறுதியில், புலவர்கள் பற்றியும் நூல்கள் பற்றியும் குறிப்புரை எழுதிச் சேர்க்கப்பட்டுள்ளது. உள்ளுறை வருமாறு: சங்க இலக்கியம்: புறப் பாட்டு, அக்ப்பாட்டு, பத்துப்பாட்டு. நீதிப்பாட்டு: திருக்குறள், திருவள்ளுவமாலை, நாலடியார் பழமொழி. காவியக் கவிதை: சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தா மணி, திருநெறித் தமிழ் மாலை; தேவாரம், திருமந்திரம், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம். பல்சுவைத் தமிழ்க் கவிதை: தூதுப் பாட்டு, பாவைப் பாட்டு, பரணிப் பாட்டு, திருத்தொண்டர் புராணம், கம்ப ராமாயணம், வில்லி பாரதம், நளவெண்பா, ஆன்றோர் கவிதைகள், சித்தர் பாட்டுகள், திருவருட்பா, பிள்ளைத் தமிழ், குறத்திப்பாட்டு, பள்ளுப் பாட்டு, சீட்டுக் கவிதை, சிலேடைப்பாட்டு, சாசனக் கவிதை, சிந்து, கிறிஸ்தவ இலக் கியம், கையறு நிலை, நாடோடிப் பாடல்கள், தெய்வம் மணக்கும் பாமாலை, தனிப் பாடல், அம்மானைப் பழ மொழி விளக்கம், சோமேசர் முது மொழி வெண்பா, குசேலோ பாக்கியானம், பந்தாட்டப் பாட்டு, செந்தமிழ் மாலை, பாரதியார் பாட்ல், இசைத் தமிழ் மாலை, நாடகத் தமிழ் மாலை, குழந்தைக் கவிதை, தற்காலக் கவிதை ஆகிய இந்தத் தலைப்புகளை ஒட்டிப் பல நூல் களிலிருந்து பாடல்கள் திரட்டித் தரப்பெற்றுள்ளன. சேர வேந்தர் செய்யுட் கோவை (முதல் தொகுதி) கருத்துரை. குறிப்புரை முதலியவற்றுடன், மு. இராகவை