பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/652

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


630 தமிழ்நூல் தொகுப்புக் கலை யங்கார் தொகுத்தது. திருவாங்கூர்ப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பதிப்புத் தொடர் - 1. திருவனந்தபுரம் பாஸ்கர அச்சுக் கூடத் தில் நா. பத்மநாப ஐயங்காரால் அச்சிடப்பட்டது. முகவுரை நாள் 1-10-1947. கொல்லம் ஆண்டு 15-2-1123. தொகுப்பாசிரியர் முகவுரையில் தந்துள்ள செய்திகளாவன: - சங்க காலப் பகுதி, இடைக்காலப் பகுதி, பிற்காலப்பகுதி என மூன்று தொகுதிகளாகத் தொகுக்க வேண்டும் என்பது முயற்சி. இப்போது முதல் தொகுதி மட்டும் வெளிவந்துள்ளது முதல் தொகுதியில், பாடல் பெற்ற சேரர் பத்தொன் பதின்மர் (19), பாடிய சேர வேந்தர் எண்மர் (8), சேரர் கிளை யினர் எழுவர் (7), சேர நாட்டின் பகுதிகளை ஆண்ட வேற்ற ரசர் மூவர் (3) ஆகியோர் பற்றிய பாடல்கள் இடம் பெற்றுள் ளன. மற்றும், சேர்வேந்தரின் நாடு-நகர்-மலை, புகழ் முதலி யன பற்றிய பாடல்களும் இடம் பெற்றுள்ளன. இத்தொகை நூலுக்குப் பாடல் தந்த நூல்களாவன:அகநானூறு, ஐங்குறு நூறு, குறுந்தொகை, சிலப்பதிகாரம் சிறுபாணாற்றுப்படை, தொல்காப்பியம், நற்றிணை,பதிற்றுப் பத்து, புறத்திரட்டு, புறநானூறு, மணிமேகலை, மதுரைக் காஞ்சி, கலித்தொகை-என்பன. இவற்றிலிருந்து திரட்டப் பட்ட பாடல்கள்-341. இரண்டாம் தொகுதி 1951-இல் வெளியாயிற்று. இந்தத் தொகுப்பால் ச்ேரநாட்டு வரலாற்றை அறிந்துகொள்ளலாம். சிவப்பிரகாசர் பெருந்திரட்டு தொகுத்தவர்: சிவப்பிரகாச அடிகளாரின் மாணாக்கர் சொரூபாநந்த சுவாமிகள். ஆய்வு:கோ.வடிவேல் செட்டியார், மங்கலம் சண்முக முதலியார் ஆகியோர்.சென்னை-கோமளே சுவரன் பேட்டை-சச்சிதாநந்த அச்சியந்திர சாலை- ஆண்டு 1912 இற்றைக்கு (1990) 670 ஆண்டுகட்குமுன் தொகுத்தது. 146 நூல்களிலிருந்து 2821 செய்யுட்கள் எடுத்துத் தொகுக்கள் பெற்றுள்ளன. சொரூபாநந்தர் தம் ஆசிரியர் சிவப்பிரகாசப் பெயரால் நூலை வழங்கவைத்துள்ளார். இந்த 146 நூல்களுர்