பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/684

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

662 தமிழ்நூல் தொகுப்புக் கலை வண்ணப் பாக்களின் தொகுப்பு. கிறித்துவ மதம் பற்றியது. 'வண்ணம் கடவுள் வாழ்த்து முதல் வண்ணம் ஆபிரகாம் அடைந்த வாக்குத் தத்தம் ஈறாக 22 வண்ணத் தலைப்புகள் உள்ளன. பல்வேறு பொருள் பற்றிப் பல பாடல்கள் இடம் பெற்றுள்ளன. புகாரில் ஒரு நாள் உலகத் தமிழ் மாநாடு-சென்னை-1968. மலர்க்குழு வெளி யீடு. புகாரில் ஒரு நாள் என்னும் தலைப்பில் நடைபெற்ற கவிதைப் போட்டியில் பரிசு பெற்றோர்-பாராட்டு பெற்றோர் ஆகிய பத்துக் கவிஞர்களின் கவிதைகளின் தொகுப்பு. மேலும், தேன் துளிகள்’ என்னும் தலைப்பில் வேறு சில கவிதைகளும் இறுதியில் சேர்க்கப்பட்டுள்ளன. காவடிச் சிந்து சுர தாளக் குறிப்பு-எஸ் இராமநாதன். வெ-கலைமகள் இசைக் கல்லூரி, சென்னை, அல்லயன்ஸ் பிரஸ், சென்னை. பொருள் உதவி-தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம். 1966. பலர் இயற்றிய காவடிச் சிந்து பாடல்களின் தொகுப்பு இது. இன்னும் பல காவடிச் சிந்துகள் காவடிச் சிந்து-கல் குளம் குப்புசாமி முதலியார்-1904, காவடிச் சித்து-சென்னை பத்மநாப விலாச அச்சயந்திர சாலையார் - 1907. காவடிச் சிந்து - கா.வே.நாராயணசாமி முதலியார்-1914, காவடிச்சிந்து-கா.சி.யாழ்ப்பாணம் பருத்தித்துறை ச.சுப்பிரமணிய சாத்திரி-1928, கபீர் தாசரின் அருள் வாக்கு மொழிபெயர்ப்பு-தி.வேங்கட கிருஷ்ணையங்கார். வெ.வானதி பதிப்பகம், சென்னை. செளந்தரா பிரின்டர்ஸ்: சென்னை. டிசம்பர் 1966. மொத்தப் பாடல்கள்-532. இறைவன் இயல்பு முதல் பிற செய்திகள் வரை 59 தலைப்புகளில் பாடல் கள் உள.