பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/744

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

722 தமிழ் நூல் தொகுப்புக் கலை பின்னர், சிவனடியார் திருக்கூட்ட வழிபாட்டிற்காகப் பன்னிரு திருமுறைகளிலிருந்தும் திரட்டிய பாடல்கள் உள்ளன. குமார தேவர் சாத்திரக் கோவையும் பெரிய நாயகி யம்மன் பதிகமும் சிதம்பர சுவாமிகள் நெஞ்சுவிடு தூதும் இந்தத் திரட்டில் குமார தேவர் இயற்றிய 16 சாத்திர நூல்கள் உள்ளன. அவை: மகாராசா துறவு, சுத்த சாதகம், விஞ்ஞான சாரம், அத்துவித உண்மை, பிரமானுபூதி விளக்கம், ஞானவம்மானை, வேதாந்த தச காரியக் கட்டளை, சகச நிட்டை, உபதேச சித்தாந்தக் கட்டளை, பிரம சித்தியகவல் சிவ தரிசன அகவல், ஆசார நெறியகவல், வேத நெறி யகவல், பிரமானுபவ அகவல், சிவ சமரச வாத அகவல், வேதாந்த தசா வத்தைக் கட்டளை என்பன. மற்றும் சிதம்பர சுவாமிகள் நெஞ்சுவிடு துது என்னும் நூலும் இந்தத் திரட்டில் உள்ளது: பிற் சேர்க்கையாகப் பெரிய நாயகி யம்மன் பதிகம் உள்ளது. பண்டார சாத்திரங்கள் பதினான்கு சித்தாந்த சாத்திரங்கள் போன்றவற்றின் பயிற்சியினால் எண்ணத்தில் தோன்றிய கோட்பாட்டு நூல்களே பண்டார சாத்திரங்களாகும். இந்தத் திரட்டிலுள்ள முதல் பத்து நூல் களை இயற்றியவர் அம்பலவாண தேசிகர் என்பார். முதல் பத்து வருமாறு: தச காரியம், சன்மார்க்க சித்தியார், சிவாச்சிரமத் தெளிவு, சித்தாந்தப் பஃறொடை, சித்தாந்த சிகாமணி, உபாய நிட்டை வெண்பா, நிட்டை விளக்கம், உபதேச வெண்பா, அதிசய மாலை, நமசிவாய மாலை. தட்சிணா மூர்த்தி தேசிகர் என்பவ ரும் தச காரியம்’ என்னும் பெயரில் ஒரு நூல் எழுதியுள்ளார். இது 11 ஆம் நூலாகும். தட்சிணா மூர்த்தி தேசிகரே இயற் றிய உபதேசப் பஃறொடை என்பது பன்னிரண்டாவது நூலாகும். சுவாமி நாத தேசிகர் இயற்றிய 'தச காரியம், என்னும் நூல் பதின் மூன்றாவது. பேரூர் வேலப்ப தேசிகர் இயற்றிய பஞ்சாக்கரப் பஃறொடை என்பது பதினான்காவது நூலாகும்.