பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/76

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


உலக மொழிகளில் நூல் தொகுப்புக் கலை 51 (7) விர்ழில் (Virgil) என்னும் பெரும்புலவரின் பாடல் தொகுப்புக்கள் (Centons) ஏழாவது பகுதியாகும். (8) உணர்ச்சியோடு உரத்துப் பாடக்கூடியவையும், மேடை களில் பாடக்கூடியவையுமான இசைப்பாடல்களின் தொகுப்பு (Carmen Declamatorium) still-stag, ug outróth. (9) முதற் சொல்லும் இறுதிச் சொல்லும் ஒத்துவரக்கூடிய அடிகள் இரண்டு கொண்ட - ஈரடிச் செய்யுட்களின் தொகுப்பு (Versus Serpentini) or girth Ló5. (10) தனித்தனிப் பொருள்களைப் பற்றிய தனித்தனிப் பாடல் தொகுதிகள் பல, பத்தாம் பகுதியாக்கப்பட்டன. (11) நிலையாமை, இறப்பு போன்றவை தொடர்பான பாடல்களின் தொகுப்பு பதினோராம் பகுதியாகும். (12) ஒருவர்க்கு இன்னொருவர் விடுக்கும் கடிதமாக உள்ள 'திருமுக ஒலை’ப் பாடல்களின் தொகுப்புப் (Epistola Declamatoria) பன்னிரண்டாம் பகுதி. عے (13) ரோசா முதலிய மலர்களைப் பற்றிய பாடல்களின் தொகுப்பு பதின்மூன்றாம் பகுதியாகும். (14) புனைவு விளக்கப் பாடல் (வருணனைப் பாக்கள்) பதினான்காம் பகுதியாக்கப்பட்டுள்ளன. (15) இசையரங்குகளில் பாடத்தக்க இன்னிசைப் பாடல் களின் தொகுதி பதினைந்தாம் பகுதியாகும். (16) வேடிக்கைப் பாடல்கள்-விளையாட்டுப் பாடல்கள் நகைச் சுவைப் பாடல்கள்-போன்றவற்றின் தொகுப்பு(Carmen Ludicrum) பதினாறாம் பகுதியாகும். (17) கடவுள் பூசனைத் தொடர்பான ஒருவகைப் பாடல் களின் தொகுப்பு (Pervigilium Veneris) பதினேழாம் பகுதி யாகும். (18) உரோமப் பேரரசை வீழ்த்தியவர்களின்தொடர்பான பாடல்களின் தொகுப்பு பதினெட்டாம் பகுதியாகும். (19) காதல் பாடல்களின் தொகுப்பு, பகுதி பத்தொன் பதாவதாகும்.