பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/777

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


6-3. பிற்சேர்க்கை-3 மாற்றுக் கருத்து ஆய்வு மாறுபாடுகள்: நெடுந்தொகை, குறுந்தொகை, நற்றிணை, புறநானூறு, ஐங்குறு நூறு, பதிற்றுப் பத்து ஆகிய தொகை நூல்கள் முன்பின்னாகத் தொகுக்கப்பட்டது தொடர்பாக யான் இந்நூலில் முன்னர்க் கூறியுள்ள கருத்துகட்கு மாறுபட்ட கருத்துகளும் உள்ளன. - * அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல் துறைப் பேராசிரியரும் என் அருமை நண்பரும் ஆகிய உயர்திரு டாக்டர் செ.வை. சண்முகம் அவர்கள் 1989 ஆம் ஆண்டில் எழுதி வெளியிட்டுள்ள மொழி வளர்ச்சியும் மொழி உணர்வும்' என்னும் நூலில், இது பற்றிய - பலரின் மாறுபட்ட கருத்துகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அறிஞர்களாகிய உ.வே. சாமிநாத ஐயர்,அ. வையாபுரிப் பிள்ளை, ச. அகத்தியலிங்கம் ஆகியோர் என் கருத்தோடு மாறுபட்டிருப்பதன்றி, அவர்கட்குள்ளும் மாறுபட்டிருப்பதை செ.வை. சண்முகனார் தெரிவித்துள்ளார். ம்ாற்றுக் கருத்து களை ஒவ்வொன்றாகக் காண்பாம்: திரட்டுக்கம்: மக்களுக்கு உள்ள இயல்பூக்கங்கள் (Instinets) பதினான் கனுள் திரட்டு ஊக்கம் (AC QUISITION) என்பது ஒன்றாகும். இயல்பூக்கங்களின் மூன்று பிரிவுகளுள் ஒன்றாகிய தற்காப்பு ஊக்கங்கள் ஏழனுள் ஒன்றாக இந்தத் திரட்டுக்கம் அமைந் துள்ளது. வாழ்க்கையின் தற்காப்புக்காக மக்கள் பலவற்றைத் திரட்டுகின்றனர் என்பது இதனால் பெறப்படும். திரட்டுக்கு-தொகுப்பிற்கு அரசியல், சமூகம், பண்பாடு ஆகியவை பின்னணியாக உள்ளன என்பதாக ஒரு கருத்து