பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/821

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்த் தொகை நூல்கள் தரும் தமிழ் இலக்கிய வரலாறு -ஒரு மீள்பார்வை பேரிலக்கியங்கள் படைத்துள்ள பெரும்புலவர்கள் கூட முதலில் தனித் தனிப் பாடல்களே எழுதியிருப்பர்; பின்னர்ச் சிறு சிறு நூல்கள் இயற்றியிருப்பர்; பின்னரே பேரிலக்கியங் கட்குப் படையெடுத்திருப்பர். இந்த உண்மையைச் சங்கத் தொகை நூற் பாடல்கள் நமக்கு அறிவிக்கின்றன. தொகுப்புகட்குள் அடங்கியுள்ள தனித் தனிப் பாடல்களை இயற்றிய புலவர்கள் நாளடைவில் இயற்றிய சிறு நூல்களும் பெரு நூல்களும் நமக்குக் கிடைத்தில. பழந்தமிழ் நூல்களுள் கிடைத்தன. சிலவே, கிடைக்காதனவே பல. உதிரிகளைத் தொடர்ந்து சிறு நூல்கள் - பின்னர்ப் பெருநூல்கள் - என் பதற்குச் சான்று இல்லாமற் போகவில்லை. பதினாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள் கொண்ட இராமாயணப் பெரு நூலைத் தமிழில் எழுதிய தம்பர் ஒரெழுபது, சரசுவதி அந்தாதி முதலிய சிறுநூல்களையும் எழுதியிருப்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது. பாரதியார், பாரதி தாசனார் முதலியோரும் முதலில் உதிரிப் பாடல்கள் எழுதிய வர்களே; பின்னரே காப்பியங்கள் படைத்தனர். மற்றும், இருபதாம் நூற்றாண்டுப்புலவர்கள் பலரும் தனித்தனி உதிரிப் பாடல்களின் தொகுப்பே வெளியிட்டுள்ளனர். இவர்களுள் சிலர் மட்டும் காப்பியம் என்னும் பெயரில் சிற்சில நூல்கள் யாத்துள்ளனர். சொந்த வாழ்க்கையிலிருந்து சான்று தருவது நூற்றுக்கு நூறு உண்மையாகும். அடியேனைப் பற்றித்தான் சொல்லப் போகிறேன். அடியேன் தொடக்கத்தில் பல உதிரிப் பாடல்களே